ரூ 24.62 லட்சம் விலையில் வெளியிடப்பட்டது ஸ்கோடா ஆக்டேவியா RS

ஸ்கோடா நிறுவனம் அதிக திறன் கொண்ட ஆக்டேவியா RS மாடலை ரூ 24.62 லட்சம் ஷோரூம் விலையில் வெளியிட்டு உள்ளது. இந்த மாடலின் முன்பதிவு ஏற்கனவே அனைத்து ஷோரூம்களிலும் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இந்த மாடல் சாதாரண மாடலை விட ரூ 2 லட்சம் அதிகமாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

ஆக்டேவியா RS என்பது சாதாரண மாடலின் அதிக செயல்திறன் கொண்ட மாடல் ஆகும். மேலும் சில ஒப்பனை மாற்றங்களும் இந்த மாடலில் கொடுக்கப்பட்டுள்ளது. புதிய கிரில், பம்பர், அலாய் வீல், தோல் இருக்கை மற்றும் தட்டையான அடிப்பகுதி கொண்ட ஸ்டேரிங் வீல் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இது மூன்றாம் தலைமுறை மாடல் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த மாடலில் 2.0 லிட்டர் டர்போ சார்ஜ் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 230 Bhp @ 5,500 - 6,200rpm திறனும் 350 Nm @ 1,500 - 4,500rpm  இழுவைத்திறனும் கொண்டது. மேலும் இந்த மாடல் 100 கிலோ மீட்டர் வேகத்தை 6.8 வினாடிகளிலும் அதிகபட்சமாக மணிக்கு 250 கிலோமீட்டர் வேகம் வரையும் செல்லும் வல்லமை கொண்டது. மேலும் இந்த மாடலில் ஆறு ஸ்பீட் கொண்ட ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.