ஆகஸ்ட் 30 ஆம் தேதி வெளியிடப்படும் ஸ்கோடா ஆக்டேவியா RS

ஸ்கோடா நிறுவனம் அதிக திறன் கொண்ட ஆக்டேவியா RS மாடலை இந்தியாவில் ஆகஸ்ட் 30 ஆம் தேதி வெளியிட உள்ளது. இந்த மாடலின் முன்பதிவு ஏற்கனவே அனைத்து ஷோரூம்களிலும் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. 

ஆக்டேவியா RS என்பது சாதாரண மாடலின் அதிக செயல்திறன் கொண்ட மாடல் ஆகும். மேலும் சில ஒப்பனை மாற்றங்களையும் பெற்றிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாடல் 2.0 லிட்டர் டர்போ சார்ஜ் பெட்ரோல் எஞ்சினுடன் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இது 245 Bhp திறனும் 370 Nm இழுவைத்திறனும் கொண்டதாக இருக்கும். மேலும் இந்த மாடல் 100 கிலோ மீட்டர் வேகத்தை 6.6 வினாடிகளிலும் அதிகபட்சமாக மணிக்கு 250 கிலோமீட்டர் வேகம் வரையும் செல்லும் வல்லமை கொண்டது.

இந்த மாடல் ஆறு ஸ்பீட் கொண்ட மேனுவல் மற்றும் ஏழு ஸ்பீட் கொண்ட ஆட்டோமேட்டிக் கியர் பாக்சில் கிடைக்கும். இந்த மாடலில் ஆல் வீல் டிரைவ் சிஸ்டமும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.