ரூ.8.42 லட்சம் ஆரம்ப விலையில் வெளியிடப்பட்டது புதிய மேம்படுத்தப்பட்ட ஸ்கோடா ரேபிட்

ஸ்கோடா நிறுவனம் புதிய மேம்படுத்தப்பட்ட ரேபிட் மாடலை ரூ. 8.42 லட்சம் சென்னை ஷோரூம் ஆரம்ப விலையில் வெளியிட்டுள்ளது.  

வேரியன்ட் வாரியாக இதன் சென்னை ஷோரூம்  விலை விவரம்:
பெட்ரோல் மாடல்:
1.6 MPI Active - ரூ 8,42,262
1.6 MPI Ambition - ரூ 9,34,893
1.6 MPI Style - ரூ 10,53,362
1.6 MPI Ambition AT - ரூ 10,47,993
1.6 MPI Style AT - ரூ 11,56,285 

டீசல் மாடல்:
1.5 TDI CR Active - ரூ 9,65,770
1.5 TDI CR Ambition - ரூ 10,58,400
1.5 TDI CR Style - ரூ 11,76,869
1.5 TDI CR Ambition AT - ரூ 11,81,792
1.5 TDI CR Style AT - ரூ 12,89,855

புதிய கிரில், பகல் நேர  LED  விளக்குகள் மற்றும் புதிய முகப்பு விளக்குகள் என முன்புறம் முழுவதுமாக மாற்றப்பட்டுள்ளது. உட்புறம், பின்புறம் மற்றும் பக்கவாட்டில் அதிக மாற்றங்கள் இல்லை.  எனினும் ஏராளமான புதிய வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளது.  

இந்த மாடல் அதே 1.6 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜினில் தான் கிடைக்கும். இதன் பெட்ரோல் என்ஜின் 110 bhp (5250 rpm) திறனும் 153Nm (3800rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் மற்றும் டீசல் என்ஜின்  மாடல் 105 bhp (4400 rpm) திறனும் 250Nm (1500-2500rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது. மேலும் இதன் இரண்டு என்ஜினுமே மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் ட்ரான்ஸ்மிசன் உடன் கிடைக்கும்.

இந்த மாடல் மாருதி சுசூகி சியாஸ், ஹோண்டா சிட்டி, ஹூண்டாய் வெர்னா மற்றும் வோல்க்ஸ் வேகன் வெண்டோ போன்ற மாடல்களுக்கு போட்டியாக இருக்கும்.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.