விரைவில் வெளியிடப்படும் ஸ்கோடா ரேபிட் மான்டே கார்லோ சிறப்பு பதிப்பு மற்றும் ஆக்டேவியா RS

ஸ்கோடா நிறுவனம் ரேபிட் மான்டே கார்லோ சிறப்பு பதிப்பு மற்றும் ஆக்டேவியா RS மாடல்களை விரைவில் வெளியிட உள்ளது. இந்த மாடல்களின் முன்பதிவு ஏற்கனவே அனைத்து ஷோரூம்களிலும் நடைபெற்று வருகிறது. இந்த இரண்டு மாடல்களும் இந்த மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்கோடா ரேபிட் மான்டே கார்லோ

ரேபிட் மான்டே கார்லோ சிறப்பு பதிப்பு மாடலில் உட்புறம் மற்றும் வெளிப்புறத்தில் ஒப்பனை மாற்றங்களும் சில கூடுதல் உபகரணங்களும் மட்டுமே கொடுக்கப்பட்டிருக்கும் மற்றபடி பெரிய மாற்றங்கள் ஏதும் இருக்காது. இந்த சிறப்பு பதிப்பு மாடல்கள் ஏற்கனவே ஐரோப்பிய நாடுகளில் மிகவும் பிரபலமான மாடல் ஆகும். ஐரோப்பிய நாடுகளில் ரேபிட் மற்றும் ஃபேபியா மாடல்களில் மான்டே கார்லோ சிறப்பு பதிப்பு மாடல் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆக்டேவியா RS  

ஆக்டேவியா RS  என்பது சாதாரண மாடலின் அதிக செயல்திறன் கொண்ட மாடல் ஆகும். மேலும் சில ஒப்பனை மாற்றங்களையும் பெற்றிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாடல் 2.0 லிட்டர் டர்போ சார்ஜ் பெட்ரோல் எஞ்சினுடன் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும்  இது 245 Bhp திறனும் 370 Nm இழுவைத்திறனும் கொண்டதாக இருக்கும். 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.