ரூ 10.75 லட்சம் ஆரம்ப விலையில் வெளியிடப்பட்டது ஸ்கோடா ரேபிட் மான்டே கார்லோ சிறப்பு பதிப்பு

ஸ்கோடா நிறுவனம் ரேபிட் மான்டே கார்லோ சிறப்பு பதிப்பு மாடலை ரூ 10.75 லட்சம் ஷோரூம் ஆரம்ப விலையில் வெளியிட்டுள்ளது. இந்த மாடலில் ஒப்பனை மாற்றங்கள் மட்டுமே செய்யப்பட்டுள்ளது எஞ்சினில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. மேலும் இந்த மாடல் நான்கு வேரியண்ட்டுகளில் வெளியிடப்பட்டுள்ளது. 

வேரியன்ட் வாரியாக இதன் விலை விவரம்:

மான்டே கார்லோ பெட்ரோல் MT - ரூ 10.75 லட்சம்
மான்டே கார்லோ பெட்ரோல் AT - ரூ 11.98 லட்சம்
மான்டே கார்லோ டீசல் MT - ரூ 12.46 லட்சம்
மான்டே கார்லோ டீசல்  AT - ரூ 13.58 லட்சம்

ரேபிட் மான்டே கார்லோ சிறப்பு பதிப்பு மாடலில் உட்புறம் மற்றும் வெளிப்புறத்தில் ஒப்பனை மாற்றங்களும் சில கூடுதல் உபகரணங்களும் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது மற்றபடி பெரிய மாற்றங்கள் ஏதும் இல்லை. இந்த சிறப்பு பதிப்பு மாடல்கள் ஏற்கனவே ஐரோப்பிய நாடுகளில் மிகவும் பிரபலமான மாடல் ஆகும். ஐரோப்பிய நாடுகளில் ரேபிட் மற்றும் ஃபேபியா மாடல்களில் மான்டே கார்லோ சிறப்பு பதிப்பு மாடல் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

எஞ்சினில் எந்த மாற்றமும் இல்லை அதே 1.6 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சினில் தன் கிடைக்கும். இதன் பெட்ரோல் என்ஜின் 105 bhp (5250 rpm) திறனும் 153Nm (3800rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் மற்றும் டீசல் என்ஜின்  மாடல் 105 bhp (4400 rpm) திறனும் 250Nm (1500-2500rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது. 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.