விரைவில் வெளியிடப்படும் மேம்படுத்தப்பட்ட ஸ்கோடா ரேபிட்

ஸ்கோடா நிறுவனம் இந்த வருட இறுதிக்குள் மேம்படுத்தப்பட்ட ரேபிட்  மாடல் வெளியிடப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஸ்கோடா  நிறுவனம் இச்செய்தியை எதிர்கால திட்டங்கள் குறித்த சந்திப்பில் தெரிவித்துள்ளது. மேலும் இந்த மாடல் தீபாவளி பண்டிகை காலத்தில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

எனினும் மேம்படுத்தப்பட்ட  ஸ்கோடா ரேபிட் மாடலின் படங்கள் ஏதும் அதிகாரப்பூர்வமாக  வெளியிடப்படவில்லை. சோதனை படங்கள் மற்றும் இணையத்தில் கசிந்த படங்களின் அடிப்படையில் பார்த்தால் இந்த மாடல் புதிய ஸ்கோடா சூப்பர்ப் செடான் மாடல் போல இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

எஞ்சினில் அதிக மாற்றங்கள் இருக்காது அதே 1.6 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜினில் தான் கிடைக்கும். இதன் பெட்ரோல் என்ஜின் 105 bhp (5250 rpm) திறனும் 153Nm (3800rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் மற்றும் டீசல் என்ஜின்  மாடல் 105 bhp (4400 rpm) திறனும் 250Nm (1500-2500rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது. மேலும் இதன் இரண்டு என்ஜினுமே ஆட்டோமேடிக் ட்ரான்ஸ்மிசன் உடன் கிடைக்கும். 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.