விசன் S எனும் SUV கான்செப்டை வெளிப்படுத்தியது ஸ்கோடா

ஸ்கோடா  நிறுவனம் விசன் S எனும் SUV கான்செப்ட் மாடலி வெளிப்படுத்தியது. சில நாட்களுக்கு முன்பு தான் இந்த கான்செப்டின் வரை படங்களை வெளியிட்டது ஸ்கோடா நிறுவனம். இந்த மாடல் வரும் ஜெனிவா மோட்டார் கண்காட்சியில் காட்சிக்கு வைக்கப்படும்.

முகப்பு கிரில் மற்றும்  வடிவமைப்பு என ஸ்கோடா மாடலின் பாரம்பரிய டிசைன் தத்பரியத்தில் அட்துத தலைமுறைக்கு ஏற்ற அம்சங்களை புகுத்தி இந்த  மாடலை வடிவமைத்துள்ளது ஸ்கோடா  நிறுவனம். இது பார்பதற்கு முழுமையான மற்றும் பெரிய SUV போல் தோற்றத்தை தருகிறது. இந்த மாடல் ஸ்கோடா எட்டி மாடலை விட பெரியதாக இருக்கும்.

மேலும் இந்த மாடல் 5. 6 மற்றும் 7 பேர் அமரக்கூடிய இருக்கை கொண்டதாக கிடைக்கும். இந்த மாடலில் 1.6 லிட்டர் பெட்ரோல் மற்றும் 2.0 லிட்டர் டீஸல் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜெனிவா மோட்டார் கண்காட்சியில் மேலும் சில விவரங்கள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது விவரங்களை தெரிந்து கொள்ள மௌவளுடன் தொடர்பில் இருங்கள்.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.