விஷன் X கான்செப்ட் மாடலின் டீசர் வரைபடத்தை வெளியிட்டது ஸ்கோடா

ஸ்கோடா நிறுவனம் புதிய ஆரம்ப நிலை விஷன் X கான்செப்ட் மாடலின் டீசர் வரைபடத்தை வெளியிட்டுள்ளது. இந்த மாடல் 2018 ஆம் ஆண்டு ஜெனீவா மோட்டார் கண்காட்சியில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த மாடல் இந்தியாவில் ஹூண்டாய் க்ரெட்டா மாடலுக்கு போட்டியாக நிலைநிறுத்தப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்கோடா கோடியாக் மற்றும் கரோக் மாடல் அடிப்படையில் தான் இந்த மாடலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. வெளிப்புறத்தில் பெரும்பாலும் கோடியாக் மற்றும் கரோக் மாடலின் வடிவங்கள் தான் பயன்படுத்தப்பட்டுள்ளது.  இந்த மாடல் கரோக் மாடலுக்கு கீழாக நிலைநிறுத்தப்படும். மேலும் கரோக் மாடலை விட சிறியதாகவும் இருக்கும். மேலும் இதன் உட்புற வரைபடமும் வெளியிடப்பட்டுள்ளது. இதன் உட்புறம் எதிர்கால வடிவமைப்பை அடிப்படையாக கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. 

எஞ்சின் தொடர்பான எந்த விவரமும் வெளியிடப்படவில்லை. எனினும் இந்த மாடல் ஒரு ஹைபிரிட் மாடலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இதன் தயாரிப்பு நிலை மாடலின் பெயரும் வெளியிடப்படவில்லை. மேலும் இந்த மாடல் 2019 ஆம் ஆண்டு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.  இந்த மாடல் தொடர்பான மேலும் சில விவரங்கள் 2018 ஆம் ஆண்டு ஜெனீவா மோட்டார் கண்காட்சியில் வெளியிடப்படும். விவரங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மௌவலுடன் தொடர்பில் இருங்கள். 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.