2017 ஆம் ஆண்டு ஷாங்காய் மோட்டார் கண்காட்சி: வெளியிடப்பட்டது ஸ்கோடா விஷன் e கான்செப்ட்

ஸ்கோடா நிறுவனம் விஷன் e கான்செப்ட் எலெட்ரிக் கூப் மாடலை 2017 ஆம் ஆண்டு ஷாங்காய் மோட்டார் கண்காட்சியில் வெளியிட்டுள்ளது. இது ஒரு முழுமையான எலெக்ட்ரிக் மாடல் ஆகும். மேலும் இந்த மாடல் 2020 ஆம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மாடலில் ஸ்கோடா கோடியாக் மாடலின் வடிவங்கள் அதிகம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த மாடல் 4.64 மீட்டர் நீளமும், 1.91 மீட்டர் அகலமும், 1.55  மீட்டர் உயரமும் மற்றும் 2.85  மீட்டர் வீல் பேசும் கொண்டது. இந்த மாடல் வோல்க்ஸ்வேகனின் புதிய MEB  பிளாட்பார்மில் தான் தயாரிக்கப்படுகிறது.  மேலும் இந்த மாடலில் 12 இன்ச் கொண்ட இன்போடைன்மெண்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டிருக்கும்.

இந்த மாடலில் 300 Bhp திறனை வழங்கும் இரண்டு மின் மோட்டார்கள் பொருத்தப்பட்டிருக்கும். மேலும் இந்த மாடலில் 500 கிலோமீட்டர் ரேஞ் கொண்ட திறனான லித்தியம்-அயர்ன் பேட்டரி பொருத்தப்பட்டிருக்கும். மேலும் இந்த மாடலில் ஸ்கோடா நிறுவனத்தின் தானியங்கி ட்ரிவிங் தொழில்நுட்பமும் பொருத்தப்பட்டிருக்கும் என  எதிர்பார்க்கப்படுகிறது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.