ரூ. 22.61 லட்சம் ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது ஸ்கோடா ஆக்டேவியா ஓனிக்ஸ்

ஸ்கோடா நிறுவனம் ரூ. 22.61 லட்சம் மும்பை ஷோரூம் ஆரம்ப விலையில் ஆக்டேவியா ஓனிக்ஸ் எடிசன் மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது. பெட்ரோல் மாடல் ரூ. 22.61 லட்சம் மும்பை ஷோரூம் விலையிலும் டீசல் மாடல் ரூ. 24.31 லட்சம் மும்பை ஷோரூம் விலையிலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. டாப் வேரியண்டில் சில ஒப்பனை மாற்றங்களையும் கூடுதல் உபகரணங்களையும் பொருத்தி இந்த ஓனிக்ஸ் எடிசன் மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது ஸ்கோடா நிறுவனம்.

இந்த மாடல் 1.8 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும்  2 லிட்டர் டீசல் என்ஜினில் கிடைக்கும். இதன் 1.8 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 180 bhp (5100-6200 rpm) திறனும் 250Nm (1250-5000rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது. இது 7 ஸ்பீட் கொண்ட DSG ஆட்டோமேடிக் ட்ரான்ஸ்மிசனில் மட்டும் கிடைக்கும். இந்த பெட்ரோல் என்ஜின் மாடல் 14.7 Kmpl மைலேஜ்  தரும் என ARAI சான்றளித்துள்ளது. 

இதன் டீசல் என்ஜின்  மாடல் 143 bhp (4000 rpm) திறனும் 320Nm (1750-3000rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது. இது 6 ஸ்பீட் கொண்ட DSG ஆட்டோமேடிக் ட்ரான்ஸ்மிசனில் மட்டும் கிடைக்கும். இந்த மாடல் 19.3 Kmpl மைலேஜும் தரும் என ARAI சான்றளித்துள்ளது.  

இந்த ஓனிக்ஸ் எடிசன் மாடலில் புதிய பின்புற ஸ்பாய்லர், கருப்பு நிற அலாய் வீல், பை-ஸெனான் ப்ரொஜெக்டர் முகப்பு விளக்குகள், எலெக்ட்ரிக் ஓட்டுநர் உயரம் மாற்றுதல் மற்றும் சன்ரூப் ஆகிய ஒப்பனை மாற்றமும் மேலும் சில கூடுதல் உபகரணமும் கொடுக்கப்பட்டுள்ளது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.