மழைக்காலங்களில் பைக் மற்றும் கார்களை பராமரிக்க சில வழிகள்

சென்னை மற்றும் தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில்  சிறிய அளவு மழை பெய்தாலே சாலைகள் எல்லாம் மோசமாகி தண்ணீர் நிற்கிறது. தற்போது போல் மிகாப்பெரிய அளவு பெய்தால் சென்னையே தண்ணீரில் மூழ்கி விடுகிறது. சாலைகளே தெரியாத அளவு தண்ணீர் நிற்கிறது. இது போன்ற சமயங்களில் வாகனங்களை  பராமரிப்பது  பற்றி சில வழிகளை இந்த தொகுப்பில் காணலாம்.

1. சாலைகளில் தண்ணீர் தேங்கி இருந்தால் அதில் வாகனத்தை செலுத்தும் முன்பு தண்ணீர் அளவு எவ்வளவு உள்ளது என்பதை தெரிந்து கொண்டு செலுத்துவது நல்லது. சைலன்ஸர் ( புகைபோக்கி) மூழ்கும் அளவு தண்ணீர் இருந்தால் வாகனத்தை செலுத்தாமல் இருப்பது மிக நல்லது. அதையும் கவனிக்காமல் சென்று விட்டால் பயத்தில் வாகனத்தை நிறுத்தாமல் முதல் கியரிலேயே வைத்து ஆக்சிலரேட்டரை குறைக்காமல் தண்ணீர் தேங்கி இருந்த இடத்தை கடப்பது சிறந்தது.

2.சாலைகளில் தண்ணீர் தேங்கி இருந்த இடத்தை கடக்கும் போது என்ஜின் ஆப் ஆகிவிட்டால் மீண்டும் என்ஜினை ஸ்டார்ட் செய்யாமல் இருப்பது நல்லது. ஏனென்றால் சைலன்ஸர்/ஏர் இன்டேக்குக்குள் வழியாக தண்ணீர் என்ஜினுக்குள் செல்வதற்கு வாய்ப்பு அதிகம் அவ்வாறு சென்று விட்டால் மிக அதிகமான செலவிற்கு வழி வகுத்துவிடும். வாகனத்தின் என்ஜினை ஸ்டார்ட் செய்யாமல் தள்ளிசெல்வது நல்லது. மேலும் என்ஜினில் புகுந்த தண்ணீரை எடுத்துவிட்டு என்ஜினை ஸ்டார்ட் செய்வது மிகமிக சிறந்தது. 

3.கார்களில் சென்று சின்னப் பள்ளங்களில் விழுந்தால்கூட, சேதாரம் கொஞ்சம் அதிகமாகத்தான் இருக்கும். வீல்கள் அடிவாங்குவதோடு இன்ஜின் சம்ப், சேஸி, பம்பர் பகுதிகள் நிச்சயம் அடி வாங்கும் எனவே சற்று கவனாமாக இருப்பது சிறந்தது.

4.மழை வெள்ளத்தில் பார்க்கிங் செய்யப்பட்ட கார்/பைக்குகளை, வெள்ளம் வடிந்தபிறகு, ஸ்டார்ட் செய்யவே கூடாது.  சர்வீஸ் சென்டருக்குக் கொண்டு செல்வதுதான் சிறந்தது. 

5. சாலைகளில் தண்ணீர் தேங்கி உள்ள இடங்களில் மெதுவாக கடப்பது சிறந்தது. ஏனென்றால் வேகமாக செல்லும் போது சிதறும் தண்ணீர் அருகில் வருபவர்களை பாதிப்பது மட்டும் இல்லாமல் ஏர் இன்டேக்குக்குள் வழியாக தண்ணீர்  செல்வதற்கு வாய்ப்பு அதிகம். 

6. அனைத்திற்கும் மேலாக மழைக்காலங்களில் மட்டுமல்லாமல் எப்போதுமே மெதுவாக செல்வது சிறந்தது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.