கசிந்தது மேம்படுத்தப்பட்ட மாருதி ஆல்டோ 800 மாடலின் படங்கள்

மேம்படுத்தப்பட்ட  மாருதி ஆல்டோ 800 மாடலின் படங்கள் இணையத்தில் கசிந்தது. இந்த படங்களின் அடிப்படையில் பார்த்தல் முன்புறம் மட்டும் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. மற்றபடி பின்புரமும் பக்கவாட்டிலும் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. உட்புறம் ஆல்டோ K10 மாடலில் உள்ளது போல் மாற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது உள்ள மாடலில் 799 cc கொள்ளளவு கொண்ட 0.8 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இது 47.3  bhp (6000 rpm) திறனும்  69Nm (3500rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது. இந்த மாடல் 22.74 Kmpl  மைலேஜ்  தரும் என ARAI சான்றளிதுள்ளது. மேம்படுத்தப்பட்ட மாடலிலும் இதே எஞ்சின் தான் பொருத்தப்பட்டிருக்கும். 

விலையில் அதிக மாற்றங்கள் இருக்காது என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாடல் ரெனால்ட் க்விட், ஹுண்டாய் இயான் மற்றும் விரைவில் வெளியிடப்படும் டட்சன் கோ  போன்ற மாடல்களுக்கு போட்டியாக இருக்கும்.
Thanks:GaadiWaadi.com

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.