சாங் யாங் நிறுவனம் டிவோலி XLV மற்றும் SIV -2 கான்செப்டை ஜெனிவா மோட்டார் கண்காட்சியில் வெளிப்படுத்தியது

சாங் யாங் நிறுவனம் ஜெனிவா மோட்டார் கண்காட்சியில் டிவோலி XLV மற்றும் SIV -2 கான்செப்டை வெளிப்படுத்தியது. டிவோலி XLV மாடல் டிவோலி அடிப்படையில் அதிக வீல் பேஸ் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. இது டிவோலி மாடலை விட 235 மில்லி மீட்டர் அதிக நீளம் கொண்டது.

இந்த மாடல் 1.6 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின்களில் கிடைக்கும். மேலும் இந்த மாடல் 6 ஸ்பீட் மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் கியர் பாக்ஸில் கிடைக்கும். மேலும் இந்த மாடல் இரண்டு மற்றும் நான்கு வீல் டிரைவ்களிலும் கிடைக்கும்.

SIV -2 கான்செப்ட் மாடல் 2013 ஆம் ஆண்டு ஜெனிவா மோட்டார் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்ட SIV -1 கான்செப்ட் மாடலின் மேம்படுத்தப்பட்ட மாடல் ஆகும்.மேலும் இது ஒரு ஹைப்ரிட் மாடல் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த மாடலில் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜினும் மற்றும் 10 kW மோட்டாரும் பொருத்தப்பட்டுள்ளது. 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.