புதிய டாடா H5 SUV மாடலின் படங்கள் இணையத்தில் கசிந்தது

லேன்ட் ரோவர் ரேஞ் ரோவர் டிஸ்கவரி மாடலின் அடிப்படையில் முற்றிலும் புதிய பிளாட்பார்மில் இந்த SUV மாடல் தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மாடலும்  டாடா நிறுவனத்தின் புதிய இம்பேக்ட் டிசைன் தத்பரியத்தில் தான் வடிவமைக்கப்பட்டுள்ளது என்பது இதன் படங்களை பார்க்கும் போதே தெளிவாக தெரிகிறது. 

இந்த மாடலில் ஜீப் காம்பஸ் மாடலில் உள்ள அதே 2.0 லிட்டர் டர்போ டீசல் எஞ்சின் தான் பொருத்தப்பட்டு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த மாடல் சிறப்பான தோற்றம் கொண்ட மாடலாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மாடல் தொடர்பான தெளிவான விவரங்கள்  2018 ஆம் ஆண்டு டெல்லி வாகன கண்காட்சியில் வெளியிடப்படும். அதை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மௌவலுடன் தொடர்பில் இருங்கள். 

Source: Autocarindia.com

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.