அதிகாரப்பூர்வமாக வெளிப்படுத்தப்பட்டது டாடா ஹரியார்: உற்பத்தி தொடங்கியது

டாடா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக புத்தம் புதிய ஹரியார் SUV மாடலை படங்கள் மூலம் வெளிப்படுத்தியுள்ளது. மேலும் இந்த மாடலின் உற்பத்தி தொடங்கப்பட்டதையும் வீடியோ மூலம் வெளியிட்டுள்ளது டாடா நிறுவனம். இந்த மாடலின் முன்பதிவு சில நாட்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இந்த மாடலை ரூ 30000 முன்பணமாக செலுத்தி டாடாவின் அதிகாரப்பூர்வ இணையத்திலோ அல்லது அருகில் உள்ள டீலர்ஷிப்பிலோ முன்பதிவு செய்து கொள்ளலாம். இந்த மாடல் முதல் முறையாக 2018 ஆம் ஆண்டு டெல்லி வாகன கண்காட்சியில் அறிமுகப்படுத்தியுள்ளது. டாடா வின் இந்த புதிய SUV கான்செப்ட் மாடல் மிகவும் அதிகமாக எதிர்பார்க்கப்பட்ட மாடல்களில் ஒன்று ஆகும். மேலும் இந்த மாடல் அடுத்த வருட ஆரம்பத்தில் வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

டாடா ஹரியார் மாடல் டாடா வின் புதிய OMEGA (Optimal Modular Efficient Global Advanced) எனும் பிளாட்பார்மில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த பிளாட்பார்ம் லேன்ட் ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் மாடலின் D8 ஆர்கிடெக்ச்சர் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மாடல் டாடா வின் மேம்படுத்தப்பட்ட இம்பேக்ட் 2.0 எனும் டிசைன் தத்பரியத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மாடலின் முன்புறத்தில் மற்ற டாடா மாடல்களில் உள்ள க்ரில் அமைப்பு தான் கொடுக்கப்பட்டுள்ளது, எனினும் சிறப்பாக பொருத்தப்பட்டுள்ளது. இந்த மாடல் முழுமையாக கம்பீரமான SUV தோற்றத்தை தருகிறது.

இந்த மாடல் 2.0 லிட்டர் க்ரையோடெக் டீசல் எஞ்சினில் கிடைக்கும். மேலும் டாடா நிறுவனம் உட்புறம் மற்றும் எஞ்சின் செயல்திறன் தொடர்பான விவரங்களை வெளியிடவில்லை. இதன் தயாரிப்பு நிலை மாடல் ஐந்து மற்றும் ஏழு இருக்கை கொண்டதாக இருக்கும் என டாடா நிறுவனம் தெரிவித்துள்ளது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.