டாடா ஹெக்சா மாடலின் முன்பதிவு தொடங்கப்பட்டது

மிகவும் எதிர்பார்க்கப்படும் மாடல்களில் ஒன்றான டாடா ஹெக்சா மாடலின் முன்பதிவு தொடங்கப்பட்டது. மேலும் இந்த மாடல் 2017 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரூ.10,000 முதல் ரூ.25,000 வரை இதன் முன்பதிவிற்கு டீலர்கள் வசூலிக்கின்றனர். இந்த மாடல் 2016 டெல்லி வாகன கண்காட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த மாடல் XE, XM, XMA, XT, XTA மற்றும் XT 4x4 என ஆறு வேரியண்ட்டுகளில் கிடைக்கும். மேலும் இந்த மாடல் ரூ. 12 லட்சம் முதல் ரூ.18 லட்சம் வரை விலை கொண்டதாக இருக்கும். 

இந்த மாடல் டாடா நிறுவனத்தின் இம்பேக்ட் டிசைன் எனும் வடிவமைப்பின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. முன்புறம் மிகவும் அழகாகவும் கம்பீரமாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. பக்கவாட்டில் பார்பதற்கு சற்று ஏரியா மாடல் போன்று தோற்றத்தை தருகிறது. இந்த மாடல் 2.2 லிட்டர் டீசல் என்ஜினில் கிடைக்கும். இது 156 Bhp திறனையும் 400 Nm இழுவைதிறனையும் வழங்கும். மேலும் இந்த மாடல் 6 ஸ்பீட் மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் கியர் பாக்ஸில் கிடைக்கும். இந்த மாடல் 4 வீல் டிரைவ் சிஸ்டத்துடனும் கிடைக்கும்.

இந்த மாடலில் சன்ரூப், எலெக்ட்ரிக் கண்ட்ரோல்ஸ் என ஏராளமான வசதிகள் கிடைக்கும். மேலும் இந்த மாடல் மஹிந்திரா XUV500 மற்றும் டொயோடா  இன்னோவா க்ரிஸ்ட்டா போன்ற மாடல்களுக்கு கடும் போட்டியாக இருக்கும்.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.