ரூ 12.18 லட்சம் விலையில் வெளியிடப்பட்டது டாடா ஹெக்சா டௌன்டவுன் சிறப்பு பதிப்பு மாடல்

டாடா நிறுவனம் புதிய ஹெக்சா டௌன்டவுன் சிறப்பு பதிப்பு மாடலை ரூ ரூ 12.18 லட்சம் டெல்லி ஷோரூம் விலையில் வெளியிட்டுள்ளது. இந்த மாடல் அப்ஸலுட் மற்றும் இண்டலெஜ்(Absolute and Indulge) என இரண்டு விதங்களில் கிடைக்கும். இதன் விவரங்களை இந்த செய்தி தொகுப்பில் காணலாம். 

இந்த புதிய ஹெக்சா டௌன்டவுன் சிறப்பு பதிப்பு மாடலில் கூடுதலாக புதிய பிரவுன் வண்ண பிரீமியம் சீட் கவர், 10.1 இன்ச் கொண்ட பின்புற என்டேர்டைன்மெண்ட் சிஸ்டம், வயர்லெஸ் சர்ஜெர், TPMS எனும் மானிட்டரிங் சிஸ்டம், புதிய அலாய் வீல், புதிய சைடு ஸ்டெப், தரை விரிப்பு, குரோம் அலங்காரங்கள் மற்றும் புதிய பிரவுன் வண்ணமும் கொடுக்கப்பட்டுள்ளது. 

அப்ஸலுட் மற்றும் இண்டலெஜ் என இரண்டு மாடல் களிலும் கொடுக்கப்பட்டுள்ள விவரங்கள் விரிவாக:

எஞ்சினில் எந்த மாற்றமும் இல்லை அதே 2.2 லிட்டர் டீசல் என்ஜினில் தான் கிடைக்கும். இது இரண்டு விதமான செயல்திறன்களில் கிடைக்கிறது. XE வேரியண்டில் 150 Bhp திறனையும் 320 Nm இழுவைதிறனையும் வழங்கும் என்ஜினும் மற்ற வேரியண்ட்டுகளில் 156 Bhp திறனையும் 400 Nm இழுவைதிறனையும் வழங்கும் என்ஜினும் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த மாடல் 6 ஸ்பீட் மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் கியர் பாக்ஸிலும் கிடைக்கும். இந்த மாடல் 4 வீல் டிரைவ் சிஸ்டத்துடனும் கிடைக்கும் இதில் ஆட்டோ, கம்போர்ட், டைனமிக் மற்றும் ரப் ரோடு எனும் நான்கு டிரைவ் மோடுகளும் உள்ளது. 

இந்த மாடல் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே தயாரிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த மாடலை வாங்க விரும்புவோர் உடனே முந்திக்கொள்வது சிறந்தது. 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.