ரூ.11.99 லட்சம் ஆரம்ப விலையில் வெளியிடப்பட்டது டாடா ஹெக்சா

டாடா நிறுவனம் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மாடல்களில் ஒன்றான  ஹெக்சா SUV  மாடலை ரூ.11.99 லட்சம் டெல்லி ஷோ ரூம் ஆரம்ப விலையில் வெளியிட்டுள்ளது. இதன் முன்பதிவு கடந்த நவம்பர் மாதம் முதலே நடைபெற்று வருகிறது. மேலும் இந்த மாடல் ஏரியா மாடலுக்கு மாற்றாக நிலைநிறுத்தப்பட உள்ளது. 

வெறியன்ட் வாரியாக இதன் டெல்லி ஷோ ரூம் விலை விவரம்:
XE 4x2 MT -ரூ. 11.99 லட்சம் 
XM 4x2 MT -ரூ. 13.85 லட்சம்
XMA 4x2 AT -ரூ. 15.05 லட்சம்
XT 4x2 MT -ரூ. 16.20 லட்சம்
XTA 4x2 AT -ரூ. 17.40 லட்சம்
XT 4x4 MT -ரூ. 17.49 லட்சம்

இந்த மாடல் டாடா நிறுவனத்தின் இம்பேக்ட் டிசைன் எனும் வடிவமைப்பின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. முன்புறம் மிகவும் அழகாகவும் கம்பீரமாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. பக்கவாட்டில் பார்பதற்கு சற்று ஏரியா மாடல் போன்று தோற்றத்தை தருகிறது. எனினும் இந்த மாடலில் ஏரியா மாடலின் தாக்கம் தெரியாத அளவு  ஏராளமான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. 

இந்த மாடலில்  2.2 லிட்டர் டீசல் என்ஜினில் பொருத்தப்பட்டுள்ளது. இது இரண்டு விதமான செயல்திறன்களில் கிடைக்கிறது. XE வேரியண்டில் 150 Bhp திறனையும் 320 Nm இழுவைதிறனையும் வழங்கும் என்ஜினும் மற்ற வேரியண்ட்டுகளில் 156 Bhp திறனையும் 400 Nm இழுவைதிறனையும் வழங்கும் என்ஜினும் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த மாடல் 6 ஸ்பீட் மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் கியர் பாக்ஸிலும் கிடைக்கும். இந்த மாடல் 4 வீல் டிரைவ் சிஸ்டத்துடனும் கிடைக்கும் இதில் ஆட்டோ, கம்போர்ட், டைனமிக் மற்றும் ரப் ரோடு எனும் நான்கு டிரைவ் மோடுகளும் உள்ளது.

இந்த மாடலில் ஹர்மான் டச் ஸ்க்ரீன் இன்போடைன்மெண்ட் சிஸ்டம், பார்க்கிங் சென்சார், சூப்பர் டிரைவ் மோட், ஹில் கிளைம்ப் கண்ட்ரோல்  என ஏராளமான வசதிகள் கிடைக்கும். மேலும் இந்த மாடல் மஹிந்திரா XUV500 மற்றும் டொயோடா  இன்னோவா க்ரிஸ்ட்டா போன்ற மாடல்களுக்கு கடும் போட்டியாக இருக்கும்.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.