ஜனவரி 20 ஆம் தேதி வெளியிடப்படும் டாடா - சீக்கா

டாடா நிறுவனம் புத்தம் புதிய சீக்கா மாடலை ஜனவரி 20 ஆம் தேதி வெளியிடும் என தெரிகிறது. மேலும் இந்த மாடல் 4 லட்சத்திற்கும் குறைவான விலையில் வெளியிடப்படலாம். செவ்ரோலேட் பீட், மாருதி சுசுகி செளிரியோ மற்றும் ஹுண்டாய் i 10 மாடல்களுக்கு போட்டியாக நிலைநிறுத்தப்படும். டாடா நிறுவனம் சில நாட்களுக்கு முன்பு தான் சீக்கா (ZICA) மாடலின் அதிகாரப்பூர்வ படங்களை  வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

பழைய மாடல்களின் தூங்கி வழிந்த வடிவத்திலிருந்து முன்புறம், பக்கவாட்டுப்பகுதி மற்றும் பின்புறம் என சீக்கா (ZICA)  மாடலின் வடிவத்தை சற்று சிறப்பாகவே வடிவமைத்துள்ளது டாடா நிறுவனம். ஆரம்ப நிலை மாடல் என்றாலும் பார்பதற்கு சற்று பெரிதாகவே தோற்றமளிக்கிறது. சவாலான விலையை நிர்ணயிப்பதில் டாடா நிறுவனத்தை அடித்துக்கொள்ள முடியாது. எனவே இந்த மாடலும் மிகவும் சவாலான  விலையிலேயே வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மாடல் மாருதி செளிரியோ, செவ்ரொலெட் பீட் போன்ற மாடல்களுக்கு போட்டியாக இருக்கும். மேலும் இந்த மாடல் இண்டிகா  மற்றும் இண்டிகோ மாடல்களுக்கு மாற்றாக இருக்கும் எனவே எதிர்பார்க்கப்படுகிறது. 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.