டாடா டியாகோ மாடலின் அதிக வசதிகள் கொண்ட புதிய வேரியன்ட் அறிமுகம்

டாடா நிறுவனம் டியாகோ மாடலின் அதிக வசதிகள் கொண்ட புதிய XZ+ வேரியன்டை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்கள் முறையே ரூ 5.57 லட்சம் மற்றும் ரூ 6.31 லட்சம் விலையில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த புதிய XZ+ வேரியன்டில் நிறைய வசதிகள் மேம்படுத்தப்பட்ட டாடா டிகோர் மாடலிலிருந்து எடுத்து பயன்படுத்தப்பட்டுள்ளது. 

டாடா டியாகோ XZ+ வேரியன்டில் கொடுக்கப்பட்டுள்ள புதிய வசதிகள்:

  • புதிய 15-இன்ச் இரட்டை வண்ண அலாய் வீல் 
  • இரட்டை வண்ண மேற்கூரை 
  • புதிய ப்ரொஜெக்டர் முகப்பு விளக்குகள் 
  • புதிய 7-இன்ச் டச் ஸ்க்ரீன் இன்போடைன்மெண்ட் சிஸ்டம்
  • ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் 
  • எலெக்ட்ரிக்கல் பக்கவாட்டு கண்ணாடி 
  • பாடி சைடு மோல்டிங் 
  • பின்புற குரோம் அஸெண்ட் 
  • புதிய ஆரஞ்சு மற்றும் ப்ளூ வண்ண தேர்வு 

என்ஜினில் எந்த மாற்றமும் இல்லை அதே 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் 1.0 லிட்டர் டீசல் என்ஜின்களில் தான் கிடைக்கும். இதன் 1.2 லிட்டர் ரெவோட்ரான் பெட்ரோல் என்ஜின் 85 Bhp திறனையும் 114 Nm இலுவைதிரனையும் வழங்கும். இதன் 1.0 லிட்டர் ரெவோடார்க் டீசல் என்ஜின் 70 Bhp திறனையும் 140 Nm இழுவைதிறனையும் வழங்கும். மேலும் இதன் இரண்டு மாடலும் ஐந்து ஸ்பீட் மேனுவல் ட்ரான்ஸ்மிஷனில் கிடைக்கும்.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.