மூன்று புதிய மாடல்களின் டீசரை வெளியிட்டது டாடா

டாடா நிறுவனம் 2018 ஆம் ஆண்டு டெல்லி வாகன கண்காட்சியில் வெளியிடும் மூன்று மாடல்களின் டீசர் விடியோவை வெளியிட்டுள்ளது. டாடா நிறுவனம் 2018 ஆம் ஆண்டு டெல்லி வாகன கண்காட்சிக்காக வேகமாக தயாராகி வருகிறது. சில நாட்களுக்கு முன்பாக ஸ்மார்ட் கார், ஸ்மார்ட் மொபிலிட்டி மற்றும் ஸ்மார்ட் சிட்டி தொடர்பான ஒரு டீசர் விடியோவை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. 2018 ஆம் ஆண்டு டெல்லி வாகன கண்காட்சி நுழைவுசீட்டு முன்பதிவு ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளது.

இந்த மாடல்கள் டாடா நிறுவனத்தின் புதிய இம்பேக்ட் டிசைன் தாத்பரியத்தில் இந்த மாடல்கள் வடிவமைக்கப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மூன்று மாடல்கள், லேன்ட் ரோவர் ரேஞ் ரோவர் டிஸ்கவரி மாடலின் அடிப்படையில் முற்றிலும் புதிய பிளாட்பார்மில் தயாரிக்கப்பட்ட புதிய SUV,  டாடா நிறுவனத்தின் AMP (Advanced Modular Platform) பிளாட் பார்மில் பிரீமியம் ஹேட்ச் மற்றும் டாடா டியாகோ ஸ்போர்ட் ஆகிய மாடல்களாக இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. டாடா நிறுவனம் ஏற்கனவே புதிய பிரீமியம் ஹேட்ச் மாடலை சோதனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது. 

மேலும் விவரங்களை உடனுக்குடன் இனிய தமிழில் தெரிந்து கொள்ள மௌவலுடன் தொடர்பில் இருங்கள். 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.