கனக்டெட் கார் தொழில்நுட்பத்தை இனைந்து தயாரிக்கும் டாடா மற்றும் மைக்ரோசாப்ட்

டாடா மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனங்கள் இனைந்து கனக்டெட் கார் தொழில்நுட்பத்தை தயாரிக்க உள்ளது. இவ்விரு நிறுவனமும் இனைந்து தயாரிக்கும் கனக்டெட் கார் தொழில் நுட்பம் முதன் முதலாக ஜெனிவா மோட்டார் கண்காட்சியில் டமோ பிராண்டில் வெளியிடப்படும் மாடலில் அறிமுகப்படுத்தப்படும். வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சொகுசு அனுபவத்தை தருமாறு இந்த தொழில்நுட்பம் வடிவமைக்கப்பட உள்ளது.

இது குறித்து டாடா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் கூறும் போது இந்த இணைப்பு மூலம் வாடிக்கையாளர்களுக்கு புதுமையான கனக்டெட் கார் ஈக்கோ சிஸ்டம் தொழில்நுட்பத்தை வழங்க முடியும் என தெரிவித்துள்ளார். 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.