செளிப்ரேசன் எடிசன் மாடல்களை வெளியிடும் டாடா மோட்டோர்ஸ்

டாடா மோட்டோர்ஸ் நிறுவனம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு  தனது அனைத்து கார் மாடல்களின் செளிப்ரேசன் எடிசன்களை வெளியிட இருக்கிறது. இந்த மாடல்கள் அனைத்தும்  அக்டோபர் 15 ஆம் தேதி முதல் விற்பனைக்கு வெளியிடப்படும். மேலும் ஜெஸ்ட் மாடலின் முதலாம் ஆண்டு நிறைவடைந்ததை தொடர்ந்து சிறப்பு ஆனிவெர்சரி எடிசன் மாடலும் வெளியிடப்படும். இந்த அனைத்து மாடல்களும் நவம்பர் 15 ஆம் தேதி வரை மட்டுமே விற்பனை செய்யப்படும்.

மேலும் பணத்தை திரும்ப பெரும் வாய்ப்பும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த வாய்ப்பு அக்டோபர் 1 ஆம் தேதி முதல் நவம்பர் 15 அம்ம தேதி வரை கார் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு பொருந்தும். ரூபாய் 2000 முதல் 50000 வரை பணம் திரும்ப பெற முடியும். மேலும் சில அதிர்ஷ்டசாலிகளுக்கு 50 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை பணத்தை திரும்ப பெற்றுக்கொள்ள முடியும்.

அனைத்து கார் மாடல்களின் செளிப்ரேசன் எடிசன்களின்  சிறப்பு உபகரணங்கள் மற்றும் விலை விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 

இது இந்த பண்டிகை காலத்தில் கார் வாங்க விரும்புவோருக்கு மிகவும் உதவியாக இருக்கும். 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.