லேண்ட் ரோவர் உதவியுடன் விலை உயர்ந்த புதிய SUV மாடலை தயாரிக்கும் டாடா

டாடா நிறுவனம் லேண்ட் ரோவர் உதவியுடன் விலை உயர்ந்த புதிய SUV  மாடலை தயாரிப்பதாகவும் 2018 ஆம் ஆண்டு வெளியிடப்படும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த மாடல் லேண்ட் ரோவர் டிஸ்கவரி மாடலை அடிப்படையாக கொண்டு வடிவமைக்கப்படுகிறது. மேலும் இந்த மாடலை Q501 என்ற குறியீட்டுப்   பெயரில் அழைக்கிறது டாடா.

இந்த மாடலில் பியட் நிறுவனத்திடமிருந்து பெறப்பட்ட 2.0 லிட்டர் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். இது 170 Bhp திறனையும் 360 Nm இலுவைதிரனையும் வழங்கும். இந்த என்ஜின் விரைவில் வெளியிடப்படும் புதிய ஜீப் மாடலிலும் பயன்படுத்தப்படுகிறது. இந்த மாடல் டாடா நிறுவனத்தின் விலை உயர்ந்த மாடலாக இருக்கும்.

இந்த மாடல் விரைவில் வெளியிடப்படும் டாடா ஹெக்சா மாடலுக்கு மேலாகவும் மகிந்திரா XUV500 மாடலுக்கு போட்டியாகவும் நிலைநிறுத்தப்படும். மேலும் விவரங்கள் தெரிந்து கொள்ள மௌவளுடன் தொடர்பில் இருங்கள்.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.