டாடா நிறுவனம் 3 வது சீசன் T1 ப்ரைமா ட்ரக் ரேஸ் போட்டியை மார்ச் 20 அன்று நடத்துகிறது

டாடா நிறுவனம் முதல் இரண்டு T1 ப்ரைமா ட்ரக் ரேஸ் போட்டிகளின் வெற்றியை தொடர்ந்து மார்ச் 20 ஆம் தேதி 3 வது சீசன் போட்டியை நடத்துகிறது. இந்த போட்டி கிரேட்டர் நொய்டாவில் உள்ள புத்தா இண்டெர்நேஷனல் சர்க்யூடில் நடக்க இருக்கிறது.

இந்த போட்டியில் இந்தியா முழுவதிலும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 12 ஓட்டுனர்கள் கலந்து கொள்வார்கள். முந்தைய போட்டிகளில் வெற்றி பெற்றவர்களும் கலந்து கொள்வார்கள். தனது ட்ரக்குகளின் பெருமையை பறைசாற்றவும் இந்தியாவில் ட்ரக் ரேஸ் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுதவும் இந்த போட்டிகளை நடத்துவதாக டாடா நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த T1 ப்ரைமா ட்ரக் ரேஸ் போட்டியை 2014 ஆம் ஆண்டிலிருந்து டாடா நிறுவனம் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.