முதலாமாண்டு நினைவாக வெளியிடப்பட்டது டாடா நெக்ஸன் க்ரேஸ் சிறப்பு பாதிப்பு மாடல்

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நெக்ஸன் காம்பேக்ட் SUV மாடல் வெளியிடப்பட்டு ஒரு ஆண்டு முடிந்ததன் நினைவாக நெக்ஸன் க்ரேஸ் சிறப்பு பாதிப்பு மாடலை வெளியிட்டுள்ளது. இந்த மாடல் க்ரேஸ் மற்றும் க்ரேஸ்+ என இரண்டு வேரியன்ட்டுகளில் வெளியிடப்பட்டுள்ளது. இதன் பெட்ரோல் மாடலின் க்ரேஸ் மற்றும் க்ரேஸ்+ சிறப்பு பதிப்பு மாடல்கள் முறையே ரூ 7.14 லட்சம் மற்றும் ரூ 7.76 லட்சம் விலையிலும் டீசல் மாடல் முறையே ரூ 8.07 லட்சம் மற்றும் ரூ 8.64 லட்சம் விலையிலும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த மாடலில் நியான் கிரீன் வண்ணத்தில் சில ஒப்பனை மாற்றங்கள் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது.

டாடா நெக்ஸன் க்ரேஸ் மாடலில் கொடுக்கப்பட்டுள்ள மாற்றங்கள்: 

  • புதிய கருப்பு மற்றும் சில்வர் வண்ண வெளிப்புறம் 
  • நியான் கிரீன் பக்கவாட்டு கண்ணாடி 
  • புதிய முகப்பு கிரில் இன்ஸெர்ட் 
  • நியான் கிரீன் வீல் அஸெண்ட்
  • க்ரேஸ் பேட்ஜ் 
  • நியான் கிரீன் வண்ண இருக்கை வேலைப்பாடு
  • பியானோ கருப்பு நிற டேஷ் போர்டு மற்றும் நியான் கிரீன் வண்ண ஏர்-வென்ட் வேலைப்பாடு 
  • பியானோ கருப்பு நிற உட்புற வேலைப்பாடு 
  • சென்டர் கன்சோல் பேட்ஜ் 

எஞ்சினில் எந்த மாற்றமும் இல்லை, அதே மூன்று சிலிண்டர் கொண்ட 1.2 லிட்டர் ரெவோட்ரான் பெட்ரோல் மற்றும் நான்கு சிலிண்டர் 1.5 லிட்டர் ரெவோடார்க் டீசல் என்ஜினில் கிடைக்கும். 1496cc கொள்ளளவு கொண்ட டீசல் என்ஜின் 110PS @ 3,750rpm திறனையும் 260Nm @ 1,500-2,750rpm இழுவைதிறனையும் வழங்கும். மற்றும் 1198cc கொள்ளளவு கொண்ட பெட்ரோல் என்ஜின் 110 PS @ 5,000rpm திறனையும் 170Nm @ 2,000-4,000rpm இழுவைதிறனையும் வழங்கும். இந்த மாடலின் இரண்டு என்ஜின்களுமே ஆறு ஸ்பீட் கொண்ட மேனுவல்ட்ரான்ஸ் மிஷனில் கிடைக்கும். மேலும் இதன் டீசல் என்ஜின் மாடலில் ஈக்கோ, சிட்டி மற்றும் ஸ்போர்ட் என டிரைவிங் மோடுகளும் கொடுக்கப்பட்டுள்ளது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.