குளோபல் NCAP சிதைவு சோதனையில் 4 ஸ்டார் தர மதிப்பீட்டை பெற்றது டாடா நெக்ஸன்

டாடா நெக்ஸன் காம்பேக்ட் SUV மாடல் குளோபல் NCAP சிதைவு சோதனையில் 4 ஸ்டார் தர மதிப்பீட்டை பெற்று சாதனை செய்துள்ளது. இந்த மாடல் பெரியவர்களுக்கான பாதுகாப்பில் 4 ஸ்டார் தர மதிப்பீட்டையும் சிரியவர்களுக்கான பாதுகாப்பில் 3 ஸ்டார் தர மதிப்பீட்டையும் பெற்றுள்ளது. டாடா நிறுவன கார்களின் கட்டுமான தரம் சிறப்பாக இருக்கும் என ஏராளமான விபத்துகள் மூலம் ஏற்கனவே பார்த்துள்ளோம், தற்போது அது  அதிகாரப்பூர்வமாக நிரூபணமாகியுள்ளது. 

இந்த சோதனையில் இரண்டு காற்றுப்பை, ABS மற்றும் ISOFIX Child Restraint System  உடன் கூடிய டாடா நெக்ஸன் மாடல் பயன்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த சோதனையின் முடிவில் டாடா நெக்ஸன் கார் விபத்தின் போது ஓட்டுநர் மற்றும் முன்புற பயணிகளின் தலை, தோல் மற்றும் நெஞ்சு பகுதிக்கு எந்த ஆபத்தும் ஏற்படுத்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சோதனையில் மணிக்கு 64 கிலோ மீட்டர் வேகத்தில் கார் மோதப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

டாடா நிறுவனம் இந்தியாவின் பாதுகாப்பான SUV என நெக்ஸன் மாடலை குறிப்பிட்டுள்ளது. இதே போல் 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு சோதனையில் டாடா செஸ்ட் மாடல்  4 ஸ்டார் தர மதிப்பீட்டை பெற்றது குறிப்பிடத்தக்கது. 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.