ரூ 5.97 லட்சம் ஆரம்ப விலையில் வெளியிடப்பட்டது டாடா நெக்ஸன்

டாடா நிறுவனம் நான்கு மீட்டருக்கும் குறைவான நீளம் கொண்ட நெக்ஸன் காம்பேக்ட் SUV மாடலை ரூ 5.97 லட்சம் சென்னை ஷோரூம் ஆரம்ப விலையில் வெளியிட்டுள்ளது. NEXt-ON என்பதின் சுருக்கமே Nexon என பெயர்க்காரணத்தை ஏற்கனவே வெளிப்படுத்தியுள்ளது டாடா நிறுவனம். இந்த மாடல் AMT கியர் பாக்சில் வெளியிடப்பட வில்லை. அடுத்த ஆறு மாதத்திற்குள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாடல்  நான்கு வேரியன்ட்டுகளில் இரண்டு எஞ்சின் ஆப்ஷனுடன் வெளியிடப்பட்டுள்ளது.

வேரியன்ட் வாரியாக இதன் சென்னை ஷோரூம் விலை விவரம்:

பெட்ரோல் மாடல்

நெக்ஸன் XE - ரூ 5,97,315
நெக்ஸன் XM - ரூ 6,62,217
நெக்ஸன் XT - ரூ 7,42,220
நெக்ஸன் XZ+ - ரூ 8,57,224
நெக்ஸன் XZ+ With Dual Tone Roof - ரூ 8,72,225

டீசல் மாடல் 

நெக்ஸன் XE - ரூ 6,97,509
நெக்ஸன் XM - ரூ 7,58,963
நெக்ஸன் XT - ரூ 8,27,414
நெக்ஸன் XZ+ - ரூ 9,42,418
நெக்ஸன் XZ+ With Dual Tone Roof - ரூ 9,57,419

இந்த மாடல் மூன்று சிலிண்டர் கொண்ட 1.2 லிட்டர் ரெவோட்ரான் பெட்ரோல் மற்றும் நான்கு சிலிண்டர் 1.5 லிட்டர் ரெவோடார்க் டீசல் என்ஜினில் கிடைக்கும். 1496cc கொள்ளளவு கொண்ட டீசல் என்ஜின் 110PS @ 3,750rpm திறனையும் 260Nm @ 1,500-2,750rpm இழுவைதிறனையும் வழங்கும். மற்றும் 1198cc கொள்ளளவு கொண்ட பெட்ரோல் என்ஜின் 110 PS @ 5,000rpm திறனையும் 170Nm @ 2,000-4,000rpm இழுவைதிறனையும் வழங்கும். இந்த மாடலின் இரண்டு என்ஜின்களுமே ஆறு ஸ்பீட் கொண்ட மேனுவல்ட்ரான்ஸ் மிஷனில் கிடைக்கும். மேலும் இதன் டீசல் என்ஜின் மாடலில் ஈக்கோ, சிட்டி மற்றும் ஸ்போர்ட் என டிரைவிங் மோடுகளும் கொடுக்கப்பட்டுள்ளது.

ப்ரொஜெக்டர் முகப்பு விளக்குகள், ஆட்டோமேட்டிக் குளிரூட்டி, ஹர்மான் டச் ஸ்க்ரீன் இன்போடைன்மெண்ட் சிஸ்டம், பின்புற சென்சார் மற்றும் கேமரா என இந்த மாடலில் ஏராளமான உபகரணங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மாடல் சிவப்பு, ப்ளூ, சில்வர், க்ரே மற்றும் வெள்ளை என ஐந்து வண்ணங்களில் கிடைக்கும். மேலும் இந்த மாடல் 209 மில்லி மீட்டர் தரை இடைவெளி கொண்டது. இந்த செக்மென்ட்டில் மட்டும் இல்லாமல் டாடா நிறுவன மாடல்களிலேயே இது தான்  அதிக தரை இடைவெளி கொண்ட மாடல் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மாடல் மாருதி சுசூகி விட்டாரா பிரீசா மற்றும் போர்டு ஈக்கோ ஸ்போர்ட் போன்ற மாடல்களுக்கு கடும் போட்டியாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும்  இல்லை. 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.