அதிக செயல்திறன் கொண்ட டாடா சஃபாரி ஸ்டார்ம் ரூ.13.25 லட்சம் விலையில் வெளியிடப்பட்டது

டாடா நிறுவனம் அதிக செயல்திறன் கொண்ட சஃபாரி ஸ்டார்ம் மாடலை ரூ.13.25 லட்சம் டெல்லி ஷோரூம் விலையில் வெளியிட்டுள்ளது. இந்த என்ஜின் 156 Bhp திறனையும் 400 Nm இழுவைதிறனையும் வழங்கும். அதே 2.2 லிட்டர் டீசல் என்ஜின் தான் இதிலும் பொருத்தப்பட்டுள்ளது ஆனால் செயல்திறன் மட்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த மாடல் VX வேரியண்டில் மட்டும் 2 மற்றும் 4 வீல் டிரைவ் சிஸ்டத்தில் கிடைக்கும். 2 வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட மாடல் ரூ.13.25 லட்சம் டெல்லி ஷோரூம் விலையிலும் 4 வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட மாடல் ரூ.14.59 லட்சம் டெல்லி ஷோரூம் விலையிலும் கிடைக்கும். மேலும் இந்த மாடல் 100 கிலோமீட்டர் வேகத்தை 13 வினாடிகளுக்குள் கடக்கும் வல்லமை கொண்டது. 

வெளிப்புறம் மட்டும் உட்புறங்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.