ரூ. 5.39 லட்சம் விலையில் வெளியிடப்பட்டது டாடா டியாகோ AMT

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஆட்டோமேட்டட் மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் கொண்ட டியாகோ மாடலை ரூ. 5.39 லட்சம் டெல்லி ஷோரூம் விலையில் வெளியிட்டுள்ளது. இது மேனுவல் மாடலை விட ரூ. 40,000 அதிகம் விலை கொண்டது. இந்த மாடல் பெட்ரோல் என்ஜின் கொண்ட XZA வேரியண்டில் மட்டுமே கிடைக்கும்.

டாடா டியாகோ AMT மாடலில் ஸ்போர்ட் மற்றும் சிட்டி என இரண்டு டிரைவிங் மோடுகள் கொடுக்கப்பட்டுள்ளது. தோற்றம் மட்டும் வடிவமைப்பில் எந்த மாற்றமும் இல்லை கியர் பாக்ஸ் மட்டும் மாற்றப்பட்டுள்ளது.

இந்த மாடல் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் 1.0 லிட்டர் டீசல்என்ஜின்களில் கிடைக்கும். இதன் 1.0 லிட்டர் என்ஜின் டாடா நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட புதிய எஞ்சின் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் 1.2 லிட்டர் ரெவோட்ரான் பெட்ரோல் என்ஜின் 85 Bhp திறனையும் 114 Nm இலுவைதிரனையும் வழங்கும். இதன் 1.0 லிட்டர் ரெவோடார்க் டீசல் என்ஜின் 70 Bhp திறனையும் 140 Nm இழுவைதிறனையும் வழங்கும்.  இதில்  1.2 லிட்டர் ரெவோட்ரான் பெட்ரோல் எஞ்சினில் மட்டுமே AMT கிடைக்கும். 

இந்த மாடல் மாருதி செளிரியோ, வேகன்R, இக்னிஸ் மற்றும் ஹூண்டாய் கிராண்ட் i10 போன்ற மாடல்களுக்கு போட்டியாக இருக்கும்.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.