ஒரு லட்சம் முன்பதிவுகளை கடந்து சாதனை படைத்தது டாடா டியாகோ

டாடா நிறுவனத்தின் டியாகோ மாடல் இதுவரை ஒரு லட்சத்திற்கும் அதிகமான முன்பதிவுகளை குவித்து சாதனை படைத்துள்ளது. இந்த மாடல் வெளியிடப்பட்டதிலிருந்து 14 மாதத்தில் இந்த சாதனையை படைத்துள்ளது. மேலும் 6 மாதத்தில் 50,000 முன்பதிவுகளை கடந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் டாடா நிறுவனம் 65,000 மாடல்களை ஏற்கனவே விற்றுள்ளதாகவும் பெட்ரோல் AMT மாடலுக்கு மக்களிடம் அதிக வரவேற்பு இருப்பதாகவும்  தெரிவித்துள்ளது.

தொடர்ந்து சொதப்பி வந்த டாடா நிறுவனத்திற்கு இது ஒரு மிகப்பெரிய புத்துணர்வாக அமைந்துள்ளது. டாடாவின் புதிய இம்பேக்ட் டிசைன், சரியான விலை, சிறந்த திறன் ஆகியவற்றால் இந்த மாடல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.  டாடாவின் இம்பேக்ட் டிசைன் தத்பரியத்தில் வடிவமைக்கப்பட்ட முதல் மாடல் இது என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த மாடல் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் 1.0 லிட்டர் டீசல்என்ஜின்களில் கிடைக்கும். இதன் 1.0 லிட்டர் என்ஜின் டாடா நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட புதிய எஞ்சின் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் 1.2 லிட்டர் ரெவோட்ரான் பெட்ரோல் என்ஜின் 85 Bhp திறனையும் 114 Nm இலுவைதிரனையும் வழங்கும். இதன் 1.0 லிட்டர் ரெவோடார்க் டீசல் என்ஜின் 70 Bhp திறனையும் 140 Nm இழுவைதிறனையும் வழங்கும். இதன் பெட்ரோல் மாடலில் மட்டும் AMT கியர் பாக்ஸ் கிடைக்கும். 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.