ரூ.3.2 லட்சம் ஆரம்ப விலையில் வெளியிடப்பட்டது டாடா டியாகோ

டாடா  நிறுவனம் ரூ.3.2 லட்சம் டெல்லி  ஷோரூம் ஆரம்ப விலையில் டியாகோ மாடலை வெளியிட்டது.  சவாலான விலையை  நிர்ணயம் செய்வதில் தன்னை அடித்துக்கொள்ள யாரும் இல்லை என மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளது டாடா.  சிகா வைரஸ் காரணமாக சீக்காவின் பெயரை டியாகோ என்று மாற்றியது மற்றும் ஏராளமான வெளியீட்டு தேதி மாற்றங்கள் என எல்லா பிரச்சனையையும் முடித்து இறுதியாக டாடா நிறுவனம் டியாகோ மாடலை இன்று வெளியிட்டது.

பழைய மாடல்களின் தூங்கி வழிந்த வடிவத்திலிருந்து முன்புறம், பக்கவாட்டுப்பகுதி மற்றும் பின்புறம் என டியாகோ மாடலின் வடிவத்தை சற்று சிறப்பாகவே வடிவமைத்துள்ளது டாடா நிறுவனம். ஆரம்ப நிலை மாடல் என்றாலும் பார்பதற்கு சற்று பெரிதாகவே தோற்றமளிக்கிறது.  டாடாவின் இம்பேக்ட் டிசைன் தத்பரியத்தில் வடிவமைக்கப்பட்ட முதல் மாடல் இது என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த மாடல் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் 1.0 லிட்டர் டீசல்என்ஜின்களில் கிடைக்கும். இதன் 1.0 லிட்டர் என்ஜின் டாடா நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட புதிய எஞ்சின் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் 1.2 லிட்டர் ரெவோட்ரான் பெட்ரோல் என்ஜின் 85 Bhp திறனையும் 114 Nm இலுவைதிரனையும் வழங்கும். இதன் 1.0 லிட்டர் ரெவோடார்க் டீசல் என்ஜின் 70 Bhp திறனையும் 140 Nm இலுவைதிரனையும் வழங்கும்.

இந்த மாடல் மாருதி செளிரியோ, செவ்ரொலெட் பீட் போன்ற மாடல்களுக்கு போட்டியாக இருக்கும். மேலும் இந்த மாடல் இண்டிகா மற்றும் இண்டிகோ மாடல்களுக்கு மாற்றாக இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த ஆண்டு இதன் அடிப்படையில் டெல்லி வாகன கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்ட கைட்5 செடான்  மாடல் வெளியிடப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. 

வேரியன்ட் வாரியாக டெல்லி ஷோ ரூம்  விலை விவரம்
பெட்ரோல்
XB: ரூ. 3.20 லட்சம்
XE: ரூ. 3.59 லட்சம்
XM: ரூ. 3.89 லட்சம்
XT: ரூ. 4.19 லட்சம்
XZ: ரூ. 4.75 லட்சம்
டீசல் 
XB: ரூ. 3.94 லட்சம்
XE: ரூ. 4.29 லட்சம்
XM: ரூ. 4.69 லட்சம்
XT: ரூ. 4.99 லட்சம்
XZ: ரூ. 5.54 லட்சம்

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.