ரூ.6000 விலை உயர்த்தப்பட்டது டாடா டியாகோ

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் டியாகோ மாடலின் விலையை ரூ.6000 உயர்த்தியுள்ளது. XB  வேரியண்ட்டை தவிர மற்ற அனைத்து வெறியன்ட்டுகளின் விலையையும் ரூ.6000 உயர்த்தியுள்ளது. டாடா நிறுவனத்தின் டியாகோ மாடல் இதுவரை 40,000 க்கும் அதிகமான முன்பதிவுகளை குவித்து சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து சொதப்பி வந்த டாடா நிறுவனத்திற்கு இது ஒரு மிகப்பெரிய புத்துணர்வாக அமைந்துள்ளது. டாடாவின் புதிய இம்பேக்ட் டிசைன், சரியான விலை, சிறந்த திறன் ஆகியவற்றால் இந்த மாடல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

பழைய மாடல்களின் தூங்கி வழிந்த வடிவத்திலிருந்து முன்புறம், பக்கவாட்டுப்பகுதி மற்றும் பின்புறம் என டியாகோ மாடலின் வடிவத்தை சற்று சிறப்பாகவே வடிவமைத்துள்ளது டாடா நிறுவனம். ஆரம்ப நிலை மாடல் என்றாலும் பார்பதற்கு சற்று பெரிதாகவே தோற்றமளிக்கிறது.  டாடாவின் இம்பேக்ட் டிசைன் தத்பரியத்தில் வடிவமைக்கப்பட்ட முதல் மாடல் இது என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த மாடல் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் 1.0 லிட்டர் டீசல்என்ஜின்களில் கிடைக்கும். இதன் 1.0 லிட்டர் என்ஜின் டாடா நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட புதிய எஞ்சின் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் 1.2 லிட்டர் ரெவோட்ரான் பெட்ரோல் என்ஜின் 85 Bhp திறனையும் 114 Nm இலுவைதிரனையும் வழங்கும். இதன் 1.0 லிட்டர் ரெவோடார்க் டீசல் என்ஜின் 70 Bhp திறனையும் 140 Nm இழுவைதிறனையும் வழங்கும். 

இந்த மாடல் மாருதி செளிரியோ, செவ்ரொலெட் பீட் போன்ற மாடல்களுக்கு போட்டியாக இருக்கும். அடுத்த ஆண்டு இதன் அடிப்படையில் டெல்லி வாகன கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்ட கைட்5 செடான்  மாடல் வெளியிடப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

வேரியன்ட் வாரியாக சென்னை ஷோரூம் விலை விவரம்
பெட்ரோல்
XB: ரூ. 3.31 லட்சம்
XE: ரூ. 3.77 லட்சம்
XM: ரூ. 4.03 லட்சம்
XT: ரூ. 4.34 லட்சம்
XZ: ரூ. 4.90 லட்சம்

டீசல் 
XB: ரூ. 4.07 லட்சம்
XE: ரூ. 4.48 லட்சம்
XM: ரூ. 4.84 லட்சம்
XT: ரூ. 5.15 லட்சம்
XZ: ரூ. 5.71 லட்சம்

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.