ரூ 5.83 லட்சம் ஆரம்ப விலையில் வெளியிடப்பட்டது டாடா டிகோர் AMT

டாடா நிறுவனம் இறுதியாக AMT கியர் பாக்ஸ் கொண்ட பெட்ரோல் எஞ்சினுடன் கூடிய டிகோர் மாடலை வெளியிட்டுள்ளது. இந்த மாடல் பெட்ரோல் எஞ்சினில் மட்டும் XTA மற்றும் XZA எனும் இரண்டு வேரியன்ட்டுகளில் முறையே ரூ 5.83 லட்சம் மற்றும் ரூ 6.3 லட்சம் சென்னை ஷோரூம் விலையில் வெளியிடப்பட்டுள்ளது. வடிவமைப்பு மற்றும் எஞ்சினில் எந்த மாற்றமும் இல்லை கூடுதலாக AMT ட்ரான்ஸ்மிஷனில் மட்டும் வெளியிடப்பட்டுள்ளது. 

இந்த மாடல் 1.2 லிட்டர் ரெவோட்ரான் பெட்ரோல் மற்றும் 1.0 லிட்டர் ரெவோடார்க் டீசல் என்ஜினில் கிடைக்கும். இதன் 1.0 லிட்டர் என்ஜின் டாடா நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட புதிய டீசல் எஞ்சின் என்பது குறிப்பிடத்தக்கது.  இதன் 1.2 லிட்டர் ரெவோட்ரான் பெட்ரோல் என்ஜின் 85 Bhp திறனையும் 114 Nm இலுவைதிரனையும் வழங்கும். இதன் 1.0 லிட்டர் ரெவோடார்க் டீசல் என்ஜின் 70 Bhp திறனையும் 140 Nm இழுவைதிறனையும் வழங்கும். இதன் பெட்ரோல் மாடல் 20.3 Kmpl மைலேஜையும், டீசல் மாடல் 24.7 Kmpl மைலேஜையும் வழங்கும். இந்த இரண்டு எஞ்சின்களில் பெட்ரோல் எஞ்சினில் மட்டும் தான் AMT டிரான்ஸ்மிஷன் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.