அதிகாரப்பூர்வமாக வெளிப்படுத்தப்பட்டது டாடா டியாகோ மற்றும் டிகோர் JTP

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் டியாகோ மற்றும் டிகோர் JTP மாடல்களை அதிகாரப்பூர்வமாக வெளிப்படுத்தியுள்ளது. மேலும் இந்த மாடல்கள் இன்று வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. டாடா நிறுவனம் டியாகோ மற்றும் டிகோர் மாடல்களின் பெர்பார்மன்ஸ் வெர்சனான டியாகோ மற்றும் டிகோர் JTP மாடல்களை 2018 ஆம் ஆண்டு டெல்லி வாகன கண்காட்சியில் காட்சிப்படுத்தியது. JTP என்பது Jayem Tata Performance என்பதின் சுருக்கம் ஆகும். டாடா நிறுவனம் கோவையை சேர்ந்த ஜெயம் ஆட்டோமோட்டிவ் நிறுவனத்துடன் பெர்பார்மன்ஸ் மாடல்களுக்கென பிரத்தியேக கூட்டணி அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த இரண்டு மாடல்களிலும் சில ஒப்பனை மாற்றங்களும் எஞ்சின் மேம்பாடும் கொடுக்கப்பட்டுள்ளது.

டாடா டியாகோ மற்றும் டிகோர் JTP மாடல்களில் புதிய இரட்டை வண்ண முன்புற பம்பர், புதிய பனி விளக்கு அமைப்பு, பெரிய ஏர் இன்டேக், சிவப்பு வண்ண பக்கவாட்டு கண்ணாடி, கருப்பு நிற மேற்கூரை, புதிய 15 இன்ச் அலாய், புதிய டயர், பானட்டில் வென்ட் மற்றும் உட்புறத்தில் புதிய தோல் இருக்கை, தோல் ஸ்டேரிங் கவர், அலுமினியம் பெடல் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த மாடல் அதே 1.2 லிட்டர் டர்போ ரெவோட்ரான் பெட்ரோல் எஞ்சினில் தான் கிடைக்கும், ஆனால் இதன் திறன் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 112PS @ 5000rpm திறனையும் 150Nm 1750-4000rpm இழுவைத்திறனையும் வழங்கும். மேலும் இந்த திறன் மேம்படுத்தப்பட்ட ஐந்து ஸ்பீட் கியர் பாக்ஸ் மூலம் வீலுக்கு கடத்தப்படுகிறது. இந்த மாடலின் சஸ்பென்ஷன் சிஸ்டமும் இறந்த ஓட்டுதல் அனுபவத்தை வழங்க மேம்படுத்தப்பட்டுள்ளது. இந்த மாடல் சாதாரண மாடலை விட 4 மில்லி மீட்டர் தரை இடைவெளி குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.