ஜெனிவா மோட்டார் கண்காட்சியில் 3-வது கான்செப்டை வெளியிடும் டாடா

டாடா நிறுவனம் அடுத்த மாதம் ஜெனிவாவில் நடைபெறும் மோட்டார் கண்காட்சியில் வெளியிட போகும் கான்செப்ட் மாடலின் டீசர் படத்தை வெளியிட்டுள்ளது. டாடா நிறுவனம் ஜெனிவா மோட்டார் கண்காட்சியில் 1998 ஆம் ஆண்டு முதல் கலந்து கொள்கிறது, இது டாடா நிறுவனத்திற்கு இருபதாவது ஆண்டு என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த நிகழ்ச்சியில் வெளியிடப்படும் ஒரு கான்செப்ட் மாடலின் டீசர் படத்தை டாடா நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த மாடல் ஒரு SUV மாடலா, ஹேட்ச்பேக் மாடலா அல்லது ஒரு புதிய செடான் மாடலா என்பது தெரியவில்லை. இந்த மாடலும் H5X மற்றும் 45X மாடல் போலவே டாடா வின் மேம்படுத்தப்பட்ட இம்பேக்ட் 2.0 எனும் டிசைன் தத்பரியத்தில் தான் வடிவமைக்கப்பட்டிருக்கும். டாடா நிறுவனம் சமீபத்தில் நடைபெற்ற டெல்லி வாகன கண்காட்சியில் H5X மற்றும் 45X என இரண்டு கான்செப்டுகளை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. டாடா நிறுவனம் H5X SUV மாடலை புதிய OMEGA (Optimal Modular Efficient Global Advanced) எனும் பிளாட்பார்மிலும் 45X ஹேட்ச் மாடலை டாடாவின் மற்றொரு புதிய ALFA (Agile Light Flexible Advanced) எனும் பிளாட்பார்மிலும் தயாரித்துள்ளது. இந்த புதிய கான்செப்ட் இவற்றில் ஏதேனும் ஒரு கான்செப்டில் தான் தயாரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் விவரங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மௌவலுடன் தொடர்பில் இருங்கள். 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.