டமோ ரேஸ்மோ எனும் முதல் ஸ்போர்ட்ஸ் காரை அறிமுகப்படுத்தியது டாடா

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஜெனிவா மோட்டார் கண்காட்சியில் டமோ பிராண்டின் ரேஸ்மோ எனும் முதல் ஸ்போர்ட்ஸ் காரை அறிமுகப்படுத்தியது. இது இருவர் மட்டுமே அமர்ந்து செல்லக்கூடிய கூப் ரக ஸ்போர்ட்ஸ் கார் ஆகும். டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இருபது வருடமாக ஜெனிவா மோட்டார் கண்காட்சியில் பங்குபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த மாடல் ரேஸ்மோ மற்றும் ரேஸ்மோ பிளஸ் என இரண்டு வேரியண்டில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் ரேஸ்மோ எனும் மாடல் சாதாரண சாலையில் இயக்க கூடிய மாடலாகவும் ரேஸ்மோ பிளஸ் எனும் மாடல் ரேஸ் டிராக்கில் இயக்க கூடிய மாடலாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மாடல் டாடா நிறுவனத்தின் புதிய MOFlex பிளாட்பார்மில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மாடலில் சிசர் வகை கதவுகள் கொடுக்கப்பட்டுள்ளது. டாடா நிறுவனம் வெறும் 24 மாதங்களில் இந்த மாடலை முழுமையாக வடிவமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த மாடலில் டாடா நிறுவனத்தின் 1.2 லிட்டர் டர்போசார்ஜ் ரேவோட்ரான் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 190 Bhp திறனையும் 210 Nm  இழுவைத்திறனையும் வழங்கும். மேலும் இந்த மாடல் நூறு கிலோமீட்டர் வேகத்தை ஆறு வினாடிகளுக்குள் கடந்து விடும். இந்த மாடலில் 6 ஸ்பீட் கொண்ட AMT கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. வடிவமைப்பு தொடர்பாக எந்த கருதும் கூற தேவையில்லை நீங்களே படங்களை பார்த்து இதன் வடிவமைப்பை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

மேலும் இதன் தயாரிப்பு நிலை மாடல் 2018 ஆம் ஆண்டு டெல்லி வாகன கண்காட்சியில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.