டாடா சீக்கா (ZICA) மாடலின் படங்கள்

டாடா நிறுவனம் சீக்கா (ZICA) மாடலின் அதிகாரப்பூர்வ படங்களை வெளியிட்டது. சில நாட்களுக்கு முன்பு தான் இந்த மாடலின் டீசரை டாடா நிறுவனம் வெளியிட்டது அத்துடன் கைட் என்று அறிமுகப்படுத்திய மாடலின் பெயரை சீக்கா (ZICA) என்றும் அறிவித்தது. அதனை தொடர்ந்து அந்த மாடலின் படங்கள் இணையத்தில் கசிந்தது. தற்போது டாடா நிறுவனம் சீக்கா (ZICA) மாடலின் அதிகாரப்பூர்வ படங்களை வெளியிட்டுள்ளது. 

பழைய மாடல்களின் தூங்கி வழிந்த வடிவத்திலிருந்து முன்புறம், பக்கவாட்டுப்பகுதி மற்றும் பின்புறம் என சீக்கா (ZICA)  மாடலின் வடிவத்தை சற்று சிறப்பாகவே வடிவமைத்துள்ளது டாடா நிறுவனம். ஆரம்ப நிலை மாடல் என்றாலும் பார்பதற்கு சற்று பெரிதாகவே தோற்றமளிக்கிறது. சவாலான விலையை நிர்ணயிப்பதில் டாடா நிறுவனத்தை அடித்துக்கொள்ள முடியாது. எனவே இந்த மாடலும் மிகவும் சவாலான  விலையிலேயே வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மாடல் மாருதி செளிரியோ, செவ்ரொலெட் பீட் போன்ற மாடல்களுக்கு போட்டியாக இருக்கும். மேலும் இந்த மாடல் இண்டிகா  மற்றும் இண்டிகோ மாடல்களுக்கு மாற்றாக இருக்கும் எனவே எதிர்பார்க்கப்படுகிறது. 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.