வெளிப்படுத்தப்பட்டது 2018 ஆம் ஆண்டு பத்தாம் தலைமுறை ஹோண்டா அக்கார்டு

ஜப்பானை சேர்ந்த ஹோண்டா நிறுவனம் டெட்ராய்டில் நடைபெற்ற வாகன கண்காட்சியில் 2018 ஆம் ஆண்டு பத்தாம் தலைமுறை அக்கார்டு மாடலை அறிமுகப்படுத்தியது. இந்த மாடலின் படங்கள் மற்றும் சில விவரங்களை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

முந்தைய மாடலின் வடிவமைப்பு சற்றும் தெரியாத அளவு இந்த மாடல் வடிவமைக்கப்பட்டுள்ளது. முன்புறம் முழுவதும் LED யால் ஆன முகப்பு விளக்குடன் கூடிய கிரில், LED பனி விளக்குகள் என வித்தியாசமான தோற்றத்தை தருகிறது. பின்புறம் மற்றும் பின்புற கூரை வடிவமைப்பு சற்று சிவிக் மாடல் போன்ற தோற்றத்தை தருகிறது. உட்புறமும் புதிதாகவும் சொகுசாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

இந்த மாடல் 1.5 லிட்டர் டர்போ சார்ஜ் பெட்ரோல் மற்றும் 2.0 லிட்டர் டர்போ சார்ஜ் பெட்ரோல் என்ஜின்களில் கிடைக்கும். மேலும் இந்த மாடல் ஹைபிரிட் என்ஜினுடனும் கிடைக்கும். இதன் 1.5 லிட்டர் என்ஜின் 194 Bhp  திறனையும் 260Nm இழுவைத்திறனையும் மற்றும் 2.0 லிட்டர் என்ஜின் 255 Bhp  திறனையும் 370Nm இழுவைத்திறனையும் வழங்கும். இதன் இரண்டு மாடலும் ஆறு ஸ்பீட் மேனுவல் ட்ரான்ஸ்மிஷனில்  கிடைக்கும் மேலும் 1.5 லிட்டர் மாடல் CVT ட்ரான்ஸ்மிஷனிலும் 2.0 லிட்டர் மாடல் 10 ஸ்பீட் ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷனிலும் கிடைக்கும். இந்த மாடல் அமெரிக்காவில் இந்த வருட இறுதியிலும் இந்தியாவில் அடுத்த வருடத்திலும் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.