இந்தியாவில் வெளியிடப்பட்டது மேம்படுத்தப்பட்ட ரேஞ்ச்ரோவர் மாடல்கள்

லேண்ட் ரோவர் நிறுவனம் மேம்படுத்தப்பட்ட ரேஞ்ச்ரோவர் மற்றும் ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் மாடல்களை இந்தியாவில் வெளியிட்டுள்ளது. இந்த மாடல்களின் வெளிப்புறம் மற்றும் உட்புறத்தில் சில ஒப்பனை மாற்றங்களும் சில கூடுதல் உபகரணங்களும் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. 

வேரியன்ட் வாரியாக இந்த மாடல்களின் விலை விவரம்:
ரேஞ்ச்ரோவர் 
டீசல்

 • Range Rover 3.0 Vogue - ரூ 1.74 கோடி
 • Range Rover 3.0 LWB Vogue - ரூ 1.87 கோடி
 • Range Rover 4.4 LWB Vogue SE - ரூ 2.26 கோடி
 • Range Rover 4.4 LWB Autobiography - ரூ 2.41 கோடி
 • Range Rover 4.4 LWB SVAutobiography - ரூ 3.76 கோடி

பெட்ரோல் 

 • Range Rover 3.0 LWB Vogue - ரூ 1.87 கோடி
 • Range Rover 4.4 LWB Vogue SE - ரூ 2.05 கோடி
 • Range Rover 5.0 Autobiography - ரூ 2.49 கோடி
 • Range Rover 5.0 Autobiography Dynamic - ரூ 3.11 கோடி
 • Range Rover 5.0 LWB SVAutobiography - ரூ 3.88 கோடி

ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட்
டீசல்

 • Range Rover Sport 3.0 S - ரூ 99.48 லட்சம் 
 • Range Rover Sport 3.0 SE - ரூ 1.14 கோடி
 • Range Rover Sport 3.0 HSE - ரூ 1.30 கோடி
 • Range Rover Sport 4.4 HSE - ரூ 1.42 கோடி

பெட்ரோல் 

 • Range Rover Sport 3.0 SE - ரூ 1.10 கோடி
 • Range Rover Sport 3.0 HSE - ரூ 1.26 கோடி
 • Range Rover Sport 5.0 Autobiography Dynamic - ரூ 1.72 கோடி
 • Range Rover Sport 5.0 SVR - ரூ 1.96 கோடி

இந்த மாடலின் வெளிப்புறத்தில் புதிய கிரில், புதிய LED முகப்பு விளக்குகள், புதிய பானெட், புதிய இரட்டை புகைபோக்கி, புதிய முன்புற மற்றும் பின்புற பம்பர் ஆகியவையும் உட்புறத்தில் இரண்டு 10 இன்ச் டச் ஸ்க்ரீன் சிஸ்டம், மசாஜ் வசதியுடன் கூடிய பின்புற இருக்கை, கிளைமேட் கண்ட்ரோல், அடாப்டிவ் குரூஸ் கண்ட்ரோல் என ஏராளமான வசதிகள் உட்புறத்திலும் கொடுக்கப்பட்டுள்ளது.

ரேஞ்ச்ரோவர் மற்றும் ரேஞ்சர்ஸ் ஸ்போர்ட் என இரண்டு மாடல்களும் முந்தய எஞ்சின் தேர்வுகளிலேயே தான் கிடைக்கும். இந்த மாடல்கள் 3.0-லிட்டர் V6, 4.4-லிட்டர் V8 டர்போ சார்ஜ் டீசல் எஞ்சின் மற்றும் 3.0-லிட்டர் V6, 5.0-லிட்டர் V8 சூப்பர் சார்ஜ் பெட்ரோல் எஞ்சின் தேர்வுகளில் கிடைக்கும். இதன் 3.0-லிட்டர் டீசல் எஞ்சின் 259PS/600Nm செயல்திறனும், 4.4-லிட்டர் டீசல் எஞ்சின் 340PS/740Nm செயல்திறனும், 3.0-லிட்டர் பெட்ரோல் எஞ்சின் 340PS/450Nm செயல்திறனும் மற்றும் 5.0-லிட்டர் பெட்ரோல் எஞ்சின் 525PS/625Nm செயல்திறனும் கொண்டது. மேலும் இதன் அணைத்து எஞ்சின் மாடல்களிலும் ௮ ஸ்பீட் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் மற்றும் ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் ஆகியவையும் கொடுக்கப்பட்டுள்ளது. 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.