உலகளவில் வெளியிடப்பட்டது வோல்க்ஸ் வேகன் டைகுன்

வோல்க்ஸ் வேகன் நிறுவனம் உலகளவில் டைகுன் கிராஸ் ஓவர் மாடலை வெளியிட்டது விரைவில் இந்தியாவிலும் வெளியிடப்படும். இந்த மாடல் 2015 ஆம் ஆண்டு பிரான்க் புர்ட் மோட்டார் கண்காட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த இரண்டாம்  தலைமுறை மாடலின் வெளிப்புறத்தில் நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. உட்புறத்தில் அதிக மாற்றங்கள் இல்லை. இந்த மாடலில் 8 இன்ச் டச் ஸ்க்ரீன் ஆடியோ சிஸ்டம், பனோரமா  சன் ரூப், ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல் என ஏராளமான வசதிகள் கிடைக்கும்.

இந்தியாவில் எந்த என்ஜினில் வெளியிடப்படும் என்று எந்த ஒரு தகவலும் வெளியிடப்படவில்லை. எனினும் 1.4 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.6 லிட்டர் டீசல் என்ஜினில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த மாடலில் 7 ஸ்பீட் ஆட்டோமேடிக் ட்ரான்ஸ் மிசன் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. 

இந்த மாடல் இந்த வருட இறுதிக்குள் ரூ.30 முதல் 40 லட்சம் வரையிலான விலையில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.