ரூ.6.15 லட்சம் ஆரம்ப விலையில் வெளியிடப்பட்டது பெரிய மகிந்திரா பொலிரோ பிக்-அப் ட்ரக்

மகிந்திரா நிறுவனம் 2,765 மில்லி மீட்டர் கார்கோ நீளம் கொண்ட பெரிய பொலிரோ பிக்-அப் ட்ரக் BSIII மாடலை ரூ.6.15 லட்சம் மும்பை ஷோரூம் ஆரம்ப விலையில் வெளியிட்டுள்ளது. இது சாதாரண மாடலை விட 485 மில்லி மீட்டர் அதிக நீளம் கொண்டது. BSIV மாடல் ரூ. 6.30 லட்சம் விலையில் கிடைக்கும். 

இந்த மாடல் 1250 கிலோ கிராம் மற்றும்1500 கிலோ கிராம் என இரண்டு வித பேலோடுகளில் கிடைக்கும். மேலும் பின்புறம் பாடி இல்லாமலும் வெறும் சேஸி மட்டும் கிடைக்கும். இந்த மாடலில் 2.5 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இது BSIII மாடலில் 62 Bhp திறனையும் BSIV மாடலில் 70 Bhp திறனையும் வழங்கும்.  

இந்த மாடலில் எஞ்சின் இம்மொபிளைசர், பவர் ஸ்டீரிங் ஆகியவை கிடைக்கும். உட்புறத்திலும் சற்று சொகுசான அனுபவத்தை தருமளவு  சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.