ஏப்ரல் 4 ஆம் தேதி வெளியிடப்படும் புதிய மகிந்திரா நுவோஸ்போர்ட் காம்பேக்ட் SUV

மகிந்திரா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக புதிய நுவோஸ்போர்ட் காம்பேக்ட் SUV ஏப்ரல் 4 ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவித்துள்ளது. இந்த மாடல் குவாண்டோ மாடலுக்கு மாற்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மாடலின் முன்புறம் முழுவதுமாக மாற்றப்பட்டுள்ளது ஆனால் பின்புறம் குவாண்டோ போன்ற தோற்றத்தையே தருகிறது. இந்த மாடல் அடுத்த தலைமுறை ஸ்கார்பியோ மாடலின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளதால் குவாண்டோ மாடலை விட எடை குறைவானதாக இருக்கும். இந்த மாடலின் ஸ்போர்டியான தோற்றத்திற்காக இந்த பெயரை சூட்டியுள்ளதாக மகிந்திரா நிறுவனம் தெரிவித்துள்ளது.

உட்புறம் மற்றும் என்ஜின் தொடர்பான விவரங்கள் ஏதும் வெளியிடப்படவில்லை. எனினும் TUV300 மாடலில் உள்ள அதே 1.5 லிட்டர் mHawk டீசல் என்ஜின் தான் பொருத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாடல் மாருதி சுசுகி விட்டாரா ப்ரீஸா, போர்டு  ஈகோஸ்போர்ட் மற்றும் மகிந்திரா TUV300 போன்ற மாடல்களுக்கு போட்டியாக இருக்கும்.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.