ரூ. 14.13 லட்சம் ஆரம்ப விலையில் வெளியிடப்பட்டது புதிய டொயோடா இன்னோவா க்ரிஸ்ட்டா

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இன்னோவா க்ரிஸ்ட்டா மாடலை ரூ. 14.13 லட்சம் சென்னை ஷோ ரூம் ஆரம்ப விலையில் வெளியிட்டுள்ளது டொயோடா நிறுவனம். டொயோடா நிறுவனம் மேம்படுத்தப்பட்ட இன்னோவா க்ரிஸ்ட்டா மாடலை 2016 டெல்லி வாகன கண்காட்சியில் வெளிப்படுத்தியது.

புதிய மேம்படுத்தப்பட்ட இன்னோவா க்ரிஸ்ட்டா  மாடலில் வெளிப்புறம் மற்றும் உட்புற தோற்றத்தில் அதிக மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக புதிய முன்புற கிரில், புதிய ப்ரொஜெக்டர் முகப்பு விளக்குகள் மற்றும்  பனி விளக்குகள் ஆகியாவை புதிதாக மாற்றப்பட்டுள்ளது. மேலும் உட்புறத்திலும் அதிக சொகுசான அனுபவத்தை தரும் அளவிற்கு மாற்றப்பட்டுள்ளது. குறிப்பாக டேஸ் போர்டு முற்றிலுமாக மாற்றப்பட்டுள்ளது.

2016  டொயோடா  இன்னோவா க்ரிஸ்ட்டா  மாடலின்  என்ஜினும் மாற்றப்பட்டுள்ளது. புதிய 2.4 லிட்டர் & 2.8 லிட்டர்  டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. 2.4 லிட்டர் என்ஜின் மேனுவல் ட்ரான்ஸ்மிசனிலும் 2.8 லிட்டர் என்ஜின் ஆட்டோமேடிக் ட்ரான்ஸ்மிசனிலும் கிடைக்கும். 

2.4 லிட்டர் என்ஜின் 150 bhp (3400 rpm) திறனும் 343Nm (1400-2500rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது.இந்த  மாடல் 15.01 kmpl மைலேஜ்  தரும் என ARAI சான்றளித்துள்ளது.  
 2.8 லிட்டர் என்ஜின் 174 bhp (3400 rpm) திறனும் 360Nm (1200-3400rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது.இந்த  மாடல் 14.29 kmpl மைலேஜ்  தரும் என ARAI சான்றளித்துள்ளது.   

வேரியன்ட் வாரியாக இதன் விலை விவரம்:

Innova Crysta 2.4 G MT 7 seater - Rs. 14,13,195
Innova Crysta 2.4 G MT 8 seater - Rs. 14,17,695
Innova Crysta 2.4 GX MT 7 seater - Rs. 15,06,057
Innova Crysta 2.4 GX MT 8 seater - Rs. 15,10,557
Innova Crysta 2.4 VX MT 7 seater - Rs. 17,93,084
Innova Crysta 2.4 VX MT 8 seater - Rs. 17,97,584
Innova Crysta 2.4 ZX MT 7 seater - Rs. 19,87,518
Innova Crysta 2.8 GX AT 7 seater - Rs. 16,36,057
Innova Crysta 2.4 GX AT 8 seater - Rs. 16,40,557
Innova Crysta 2.8 ZX AT 7 seater - Rs. 21,17,518

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.