இணையத்தில் கசிந்தது அடுத்த தலைமுறை மாருதி சுசுகி ஸ்விப்ட் மாடலின் பிரௌச்சர்

அடுத்தை தலைமுறை மாருதி சுசுகி ஸ்விப்ட் ஜப்பான் வெர்சன் மாடலின் பிரௌச்சர் இணயத்தில் கசிந்து வேகமாக பரவி வருகிறது. இந்த படங்களை வைத்து பார்த்தல் மாருதி சுசுகி நிறுவனம் உட்புறம் மற்றும் வெளிப்புறத்தில் ஏராளமான ஒப்பனை மாற்றங்கள் செய்துள்ளதாக தெரிகிறது.  இதே போல் ஏற்கனவே இந்த மாடலின் படங்கள் இணையத்தில் கசிந்தது குறிப்பிடத்தக்கது.

முன்புறத்தில் புதிய அருங்கோன வடிவ கிரில், புதிய முகப்பு விளக்குகள், புதிய பனி விளக்கு அறை மற்றும் பின்புறத்தில் புதிய பின்புற விளக்குகள், புதிய இரட்டை புகை போக்கி என முதலிலும் புதிய தோற்றத்தை தருகிறது. மேலும் பக்கவாட்டு கோடுகளும் சிறிது மாற்றப்பட்டுள்ளது. இரண்டாம் கதவுக்கான கைப்பிடிகள் விண்ட்  சீல்டில் கொடுக்கப்பட்டுள்ளது. உட்புறம் டேஸ் போர்டு, ஸ்டீரிங் வீல் என முழுவதுமாக மாற்றப்பட்டுள்ளதாக தெரிகிறது

இந்த மாடல் 1.0 லிட்டர் பூஸ்டர் ஜெட் எஞ்சினிலும் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அடுத்த தலை முறை ஸ்விப்ட் மாடல்  அடுத்த வருட ஆரம்பத்தில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.