2018 ஆம் ஆண்டு வெளியிடப்படும் அடுத்த தலைமுறை ஸ்கோடா எட்டி

ஸ்கோடா நிறுவனம் அடுத்த தலைமுறை  எட்டி மாடலை 2018 ஆம் ஆண்டு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இந்த மாடலின் படங்களை மட்டும் வெளியிட்டுள்ளது ஸ்கோடா நிறுவனம். இந்த மாடல் வோல்க்ஸ்வேகன்  டைகுன் மாடலின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த மாடல் முற்றிலும் புதிய தோற்றத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. புதிய LED விளக்குகள், புதிய கிரில் மற்றும் புதிய வடிவம்  போன்றவை சற்று விசன் S கான்செப்ட் மாடல் போன்ற தோற்றத்தை இந்த மாடல் தருகிறது. பழைய எட்டி மாடலின் வடிவம் சிறிதளவு கூட இந்த மாடலில் தெரியவில்லை. என்ஜின் தொடர்பான தகவல்கள் ஏதும் வெளியிடப்படவில்லை. எனினும் பழைய மாடலில் உள்ள அதே என்ஜின் ஆப்சன்களிலேயே கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த மாடல் ஹைப்ரிட் என்ஜினிலும் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாடல் 25 லட்சம் முதல் 30 லட்சம் விலை கொண்டதாக இருக்கும்.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.