2017 ஆம் ஆண்டு இந்தியாவில் வெளியிடப்பட்ட மூன்று காம்பேக்ட் செடான் மாடல்கள்

சமீப காலமாக இந்தியாவில் காம்பேக்ட் செடான் மார்க்கெட் மிகவும் வேகமாக வளர்ந்து வருகிறது. பெரும்பாலும் அனைத்து நிறுவனங்களும் ஒரு காம்பேக்ட் செடான் மாடலை வெளியிட்டு வருகிறது. அவற்றில் 2017 ஆம் ஆண்டு இந்தியாவில் வெளியிடப்பட்ட புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட மூன்று காம்பேக்ட் செடான் மாடல்களை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

டாடா டிகோர்

டியாகோ மாடலை அப்படியே பின்புறத்தை மட்டும் மாற்றி செடான் மாடலாக வடிவமைத்துள்ளது. இருப்பினும் பின்புற வடிவத்தை மிகவும் சிறப்பாகவே வடிவமைத்துள்ளது டாடா நிறுவனம். இந்த மாடலில் ப்ரொஜெக்டர் முகப்பு விளக்குகள், LED பின்புற விளக்குகள், LED ஸ்டாப் விளக்கு, 5 - இன்ச் ஹர்மான் டச் ஸ்க்ரீன் இன்போடைன்மெண்ட் சிஸ்டம், பெட்ரோல் மாடலில் 15 இன்ச் அலாய் வீல் மற்றும் டீசல் மாடலில் 14 இன்ச் அலாய் வீல் என ஏராளமான வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளது. 

இந்த மாடல் 1.2 லிட்டர் ரெவோட்ரான் பெட்ரோல் மற்றும் 1.0 லிட்டர் ரெவோடார்க் டீசல் என்ஜினில் கிடைக்கும். இதன் 1.0 லிட்டர் என்ஜின் டாடா நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட புதிய எஞ்சின் என்பது குறிப்பிடத்தக்கது.  இதன் 1.2 லிட்டர் ரெவோட்ரான் பெட்ரோல் என்ஜின் 85 Bhp திறனையும் 114 Nm இலுவைதிரனையும் வழங்கும். இதன் 1.0 லிட்டர் ரெவோடார்க் டீசல் என்ஜின் 70 Bhp திறனையும் 140 Nm இழுவைதிறனையும் வழங்கும். இதன் பெட்ரோல் மாடல் 20.3 Kmpl மைலேஜையும், டீசல் மாடல் 24.7 Kmpl மைலேஜையும் வழங்கும்.

இந்த மாடல் ரூ. 4.7 லட்சம் முதல் ரூ. 7.03 லட்சம் சென்னை ஷோரூம் விலையில் கிடைக்கும்.

மாருதி சுசூகி டிசைர்

முன்புறத்தில் புதிய அருங்கோன வடிவ கிரில், புதிய முகப்பு விளக்குகள், புதிய பனி விளக்கு அறை மற்றும் பின்புறத்தில் புதிய பின்புற விளக்குகள் என முற்றிலும் புதிய தோற்றத்தை தருகிறது. மேலும் பக்கவாட்டு கோடுகளும் சிறிது மாற்றப்பட்டுள்ளது.  உட்புறம் டேஸ் போர்டு, ஸ்டீரிங் வீல் என முழுவதுமாக மாற்றப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த மாடலில் புதிய அடிப்புறம் தட்டையான ஸ்டேரிங் வீல் மற்றும் பின்புற AC வென்ட் ஆகியவை புதிதாக கொடுக்கப்பட்டுள்ளது. பார்ப்பதற்கு முந்தய மாடல் போல் தோற்றமளித்தாலும் இந்த மாடலும் முற்றிலும் புதுமையாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மாடல் முந்தய மாடலை விட 40  மில்லி மீட்டர்  அதிக அகலமும் 40  மில்லி மீட்டர்  குறைவான உயரமும் கொண்டது. அதேபோல் பெட்ரோல் மாடல் 85 கிலோவும் டீசல் மாடல் 105 கிலோவும் குறைந்த எடை கொண்டது.

எஞ்சினில் எந்த மாற்றமும் இல்லை அதே 1.2 லிட்டர் K-சீரீஸ் பெட்ரோல் என்ஜின் மற்றும் 1.3 லிட்டர் DDiS  டீசல் எஞ்சினில் தான் கிடைக்கும். இதன் பெட்ரோல் என்ஜின்  83bhp (6000 rpm) திறனும்  113Nm (4200rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் மற்றும் டீசல்  என்ஜின்  75bhp (4000 rpm) திறனும் 190Nm (2000rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது. இரண்டு மாடலும் ஐந்துஸ்பீடு மேனுவல் மற்றும் ஐந்து ஸ்பீட் ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷனில் கிடைக்கும். இதன் பெட்ரோல் மாடல் 22.0kmpl மைலேஜும் டீசல் மாடல் 28.4kmpl மைலேஜும் தரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாடல் ரூ. 5.37 லட்சம் முதல் ரூ. 9.35 லட்சம் சென்னை ஷோரூம் விலையில் கிடைக்கும்.

ஹூண்டாய் எக்ஸென்ட்

புதிய எக்ஸென்ட் மாடலில் மற்ற இடங்களை விட பின்புறம் மற்றும்  முன்புறத்தில் அதிக மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. புதிய அறுங்கோண க்ரில் அமைப்பு இந்த மாடலில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த க்ரில் அமைப்பு தான் இனி வரும் அனைத்து ஹூண்டாய் கார்களிலும்  இருக்கும். மேலும் முன்புறத்தில் புதிய  பனி விளக்குகள், முகப்பு விளக்குகள் மற்றும் பகல் நேரத்தில் ஒளிரும் LED  விளக்குகள்  கொடுக்கப்பட்டுள்ளது.  பின்புறத்தில் பம்பர், பின்புற விளக்குகள் மற்றும் வடிவமைப்பு ஆகியவை மாற்றம்  செய்யப்பட்டுள்ளது. மேலும் உட்புறத்தில் டாப் வேரியண்டில் புதிய 7 இன்ச் டச் ஸ்க்ரீன் இன்போடைன்மெண்ட் சிஸ்டம் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த மாடலின் பெட்ரோல் என்ஜினில் எந்த மாற்றமும் இல்லை. அதே 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜினில் தான் கிடைக்கிறது. இது 83 BHP திறனையும் 114 NM இழுவைத்திறனையும் வழங்கும். ஆனால் இந்த மாடலின் டீசல் என்ஜினில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த மேம்படுத்தப்பட்ட மாடல் புதிய 1.2 லிட்டர் டீசல் என்ஜினில் கிடைக்கும். இது 75 BHP திறனையும் 190 NM இழுவைத்திறனையும் வழங்கும்.  இதன்  பெட்ரோல் மாடல் 5 ஸ்பீட் மேனுவல் மற்றும் 4 ஸ்பீட் ஆட்டோமேட்டிக் கியர் பாக்சிலும் டீசல் மாடல் 5 ஸ்பீட் மேனுவல் கியர் பாக்சிலும் கிடைக்கும்.

இந்த மாடல் ரூ. 5.45 லட்சம் முதல் ரூ. 8.5 லட்சம் சென்னை ஷோரூம் விலையில் கிடைக்கும்.
 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.