இணையத்தில் கசிந்தது டொயோடா C-HR காம்பேக்ட் கிராஸ் ஓவர் மாடலின் படங்கள்

2016 ஜெனிவா மோட்டார் கண்காட்சியில் அறிமுகம் செய்வதாக இருந்த டொயோடா C-HR காம்பேக்ட் கிராஸ் ஓவர் மாடலின் படங்கள் இணையத்தில் கசிந்தது. இதன் கான்செப்ட் 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற பாரிஸ் மோட்டார் கண்காட்சியில் அறிமுகம் செய்யப்பட்டது. இது கான்செப்ட் மாடல் போல் அல்லாமல் தயாரிப்பு நிலை மாடல் போல் தோற்றமளிக்கிறது.

முன்புறம், பின்புறம் மற்றும் பக்கவாட்டுப்பகுதி என அணைத்து பக்கமும் கரடுமுரடான தோற்றத்தை தரும் வகையில் மிகவும் வித்தியாசமாகவும் அழகாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. முன்புறத்தில் பகல் நேரத்தில் ஒளிரும் LED விளக்குகள் மற்றும் பின்புற LED விளக்குகள் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளது. எஞ்சின் தொடர்பாக எந்த ஒரு தகவலும் இல்லை.

பார்பதற்கு ப்ரீமியும் செக்மென்ட் கிராஸ் ஓவர் கார் போல் தோற்றமளிக்கிறது. எனவே இந்த மாடல் இந்தியாவில் வெளியிடப்படும என்பது தெரியவில்லை. இந்தியாவில் காம்பேக்ட் SUV மாடல்களுக்கு மவுசு தற்போது அதிகம் இருப்பதால் சிறிய மாற்றங்களை செய்து வெளியிடப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் விவரங்கள் 2016 ஜெனிவா மோட்டார் கண்காட்சியில் அதிகாரபூர்வமாக வெளியிட்ட பிறகு தெரியும்.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.