புதிய மேம்படுத்தப்பட்ட லேன்ட் க்ரூசர் 200 மாடலை ரூ.1.3 கோடி விலையில் இந்தியாவில் வெளியிட்டது டொயோடா

டொயோடா நிறுவனம் இந்தியாவில் விலையுர்ந்த சொகுசு SUV மாடலான லேன்ட் க்ரூசர் 200 மாடலை ரூ.1.3 கோடி விலையில் இந்தியாவில் வெளியிட்டது. வெளிப்புறம் மற்றும் உட்புறத்தில் அதிக மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. மேலும் சில உபகரணங்களும் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது.

வெளிப்புறத்தில் குறிப்பாக அறுங்கோண வடிவ முகப்பு  கிரில், புதிய LED முகப்பு விளக்குகள் மட்டும் புதிய அலாய் வீல் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளது. 

மேலும் உட்புறத்தில் காற்றுப்பை, ஆண்டி லாக் ப்ரேக், கீலெஸ் என்ட்ரி, டச் ஸ்க்ரீன் ஆடியோ சிஸ்டம், ஸ்டீரிங் வீலில் ஆடியோ கட்டுப்பாடு,  தானியங்கி குளிரூட்டி, ஸ்டார்ட் /ஸ்டாப் பொத்தான், க்ரூஸ் கன்ட்ரோல்  ஆகியவை  இந்த மடலில் கிடைக்கும்.

இந்த மாடல்  4.5 லிட்டர் டீசல் என்ஜினில் மட்டும்  கிடைக்கும். இந்த என்ஜின் 4461CC கொள்ளளவு கொண்டது. இது 262 bhp (3400 rpm) திறனும் 650Nm (1600-2600rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது.

மேலும் அனைத்து விதமான தொழில் நுட்ப விவரங்களையும் தெரிந்துகொள்ள கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

http://www.mowval.com/car-overview.php?car_company=15&car_model=100

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.