மூன்று வேரியண்டுகளில் வெளியிடப்படும் டொயோடா இன்னோவா க்ரிஸ்டா பெட்ரோல்

டொயோடா நிறுவனம் 2.7 லிட்டர் பெட்ரோல் என்ஜின் கொண்ட  இன்னோவா க்ரிஸ்டா மாடலின் முன்பதிவை சில நாட்களுக்கு முன்பு தான் தொடங்கியது. தற்போது பெட்ரோல் என்ஜின் கொண்ட  இன்னோவா க்ரிஸ்டா மாடல் Gx, Vx மற்றும் Zx  என மூன்று வேரியண்டுகளில் வெளியிடப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இவற்றில் Vx  வேரியண்ட் மேனுவல்ட்ரான்ஸ் மிஷனில் மட்டும் கிடைக்கும். Gx  மற்றும் Zx  வேரியண்டுகள் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் என இரண்டு ட்ரான்ஸ்மிஷனிலும் கிடைக்கும்.

இந்தோனேசியாவில் இந்த மாடல் 2.0 லிட்டர் பெட்ரோல் என்ஜினுடன் கிடைக்கிறது. அனால் இந்த என்ஜின் இந்தியாவில் வெளியிடப்படவில்லை புதிய 2.7 லிட்டர் என்ஜினுடன் தான் வெளியிடப்படும். இந்த 2.7 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 166 bhp திறனையும் 245 Nm இழுவைத்திறனையும் வழங்கும். மேலும் இந்த மாடல் 5 ஸ்பீட் கொண்ட மேனுவல் கியர் பாக்ஸ் உடனும் 6 ஸ்பீட் கொண்ட ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் உடனும் கிடைக்கும்.  

தற்போது இந்த மாடல் 2.4 மற்றும் 2.8 லிட்டர் டீசல் என்ஜின்களில் கிடைக்கிறது.  2.4 லிட்டர் என்ஜின் 150 bhp (3400 rpm) திறனும் 343Nm (1400-2500rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது.இந்த  மாடல் 15.01 kmpl மைலேஜ்  தரும் என ARAI சான்றளித்துள்ளது.   2.8 லிட்டர் என்ஜின் 174 bhp (3400 rpm) திறனும் 360Nm (1200-3400rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது.இந்த  மாடல் 14.29 kmpl மைலேஜ்  தரும் என ARAI சான்றளித்துள்ளது. 

தற்போது இந்தியாவின் சில மாநிலங்களில் தேசிய பசுமை தீர்ப்பாயம்  2000 cc  கொள்ளளவிற்கு அதிகமான டீஸல் என்ஜின் கொண்ட  மாடல்கள் தடை செய்யப்பட்டுள்ளதால் அனைத்து நிறுவனங்களும் பெட்ரோல் என்ஜின் மாடல்களை வெளியிட்டு வருகிறது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.